
சத்திஸ்கரின் சுக்மா மாவட்டத்தில் நக்சல்கள் வைத்த கண்ணிவெடி வெடித்ததில் சிஆர்பிஎப் கோப்ரா கமாண்டோ படைப் பிரிவைச் சேர்ந்த அசிஸ்டன்ட் கமாண்டன்ட் வீரமரணம் அடைந்துள்ளார்.மேலும் பத்து வீரர்கள் படுகாயம் அடைந்துள்ளனர்.
சனியன்று இரவு 10மணி அளவில் இந்த சம்பவம் நடைபெற்றதாக காவல்துறை உறுதிப்படுத்தியுள்ளது.டட்மெட்லா கிராமம் அருகே தேடுதல் வேட்டை நடத்திவிட்டு பாதுகாப்பு படை வீரர்கள் திரும்பும் வழியில் இந்த கண்ணிவெடி விபத்து ஏற்பட்டுள்ளது.இரு கண்ணிவெடி வெடித்ததில் பத்து வீரர்கள் காயமடைந்துள்ளனர்.
காயமடைந்த எட்டு வீரர்கள் ராய்ப்பூர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர்.இதில் அசிஸ்டன்ட் கமாண்டன்ட் நிதின் அவர்கள் வீரமரணம் அடைந்துள்ளார்.
சிஆர்பிஎப் படைப் பிரிவின் சிறப்பு படை தான் கோப்ரா பிரிவு ஆகும்.கமாண்டோ பட்டாலியன் ஃபார் ரிசோலியுட் ஆக்சன் என்பதன் சுருக்கமே கோப்ரா ஆகும்.நக்சல்களை ஒடுக்கவே உருவாக்கப்பட்ட சிறப்பு பட்டாலியன் ஆகும்.சமீப காலங்களில் மிகச் சிறப்பாகவே இந்த படை செயல்பட்டு வருகிறது.
காடுசார் போர்முறைகளுக்காக இந்த படை சிறப்பாக பயிற்றுவிக்கப்பட்டுள்ளது.கோப்ரா படையின் தீர்க்கமான நடவடிக்கைகளால் பல நக்சல்கள் தொடர்ந்து சரணடைந்து வருகின்றனர்.சத்திஸ்கர் காவல் துறையுடன் இணைந்து வீரர்கள் சிறப்பாகவே செயல்பட்டு வருகின்றனர்.