மூன்று நாட்களாக தொடர்ந்து எல்லையில் தாக்குதல் நடத்தும் பாக்

  • Tamil Defense
  • November 12, 2020
  • Comments Off on மூன்று நாட்களாக தொடர்ந்து எல்லையில் தாக்குதல் நடத்தும் பாக்

ஜம்மு காஷ்மீர் யூனியன் பிரதேசத்தின் பூஞ்ச் மாவட்டத்தில் உள்ள எல்லைக் கோடு பகுதியில் கடந்த மூன்று நாட்களாக பாகிஸ்தான் அத்துமீறி துப்பாக்கிச்சூடு நடத்தி வருகிறது.

காலை 9 மணி அளவில் பூஞ்ச் மாவட்டத்தின் ஷாபூர்,கிர்னி மற்றும் கஸ்பா செக்டார்களிலும்,ராஜோரி மாவட்டத்தின் நௌசேரா செக்டாரிலும் தாக்குதல் நடத்தி வருகிறது.

இந்த தாக்குதலுக்கு இந்திய இராணுவம் சார்பில் கடும் பதிலடி கொடுக்கப்பட்டு வருகிறது.

இந்த தாக்குதல்களில் எந்தவித உயிர்ச்சேதமும் ஏற்படவில்லை.