
இந்திய சீன உறவில் மிக கடுமையான விரிசல் ஏற்பட்டுள்ளதாக வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் அவர்கள் கூறியுள்ளார்.
சர்தார் வல்லபாய் படேல் அவர்களின் பிறந்த நாளின் போது பேசிய அவர் இந்த தகவலை வெளியிட்டுள்ளார்.1962க்கு பிறகு எல்லையில் பெரிய அளவிலான போர் வெடித்ததில்லை.
ஆனால் தற்போது மிக மோசமான நிலை நிலவுகிறது.இரு நாடுகளும் லட்சக்கணக்கில் படைகளை எல்லையில் குவித்துள்ளன.
மக்மோகன் எல்லைக் கோடு தான் உண்மையான எல்லையாக உள்ளது.ஆனால் சீனா அதை ஏற்க மறுத்து அருணாச்சல பிரதேச பகுதியை உரிமை கொண்டாடி வருகிறது.
மேலும் சமீபத்தில் வளர்ந்து வரும் அமெரிக்க-இந்திய உறவின் காரணமாக இந்தியா மீது மிகுந்த வெறுப்புணர்வை சீனா காட்டி வருகிறது.