இந்தியா உள்நாட்டிலேயே மேம்படுத்தியுள்ள கனஎடை டோர்பிடோ தான் வருணாஸ்திரா.இந்த டோர்பிடோவை தற்போது Bharat Dynamics நிறுவனம் இந்திய கடற்படைக்கு டெலிவரி செய்துள்ளது.சீனக் கடற்படை தனது இருப்பை இந்திய பெருங்கடல் பகுதியில் அதிகரித்து வரும் வேளையில் வருணாஸ்திரா டோர்பிடோ படையில் இணைத்துள்ளது இந்திய கடற்படைக்கு பெரிய உந்துதலாக இருக்கும்.
இந்த வருணாஸ்திரா டோர்பிடோவை பாரத் டைனமிக்ஸ் லிமிடெட் நிறுவனம் தான் தயாரித்து வருகிறது.இதற்காக நேற்று நடைபெற்ற விழாவில் வருணாஸ்திரா கனஎடை டோர்பிடோவை இந்திய கடற்படைக்கு வழங்கியது Bharat Dynamics Limited (BEL) நிறுவனம்.
இந்த டோர்பிடோவை கடற்சார் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப ஆய்வகம் வடிவமைத்தது.இது விசாகப்பட்டிணத்தில் அமைந்துள்ள டிஆர்டிஓ கிளை நிறுவனம் ஆகும்.விசாகப்பட்டிணத்தில் உள்ள பெல் நிறுவனத்தில் இந்த டோர்பிடோக்கள் தயாரிக்கப்படுகிறது.
வருணாஸ்திரா ஒரு நீர்மூழ்கி எதிர்ப்பு டோர்பிடோ ஆகும்.40கிமீ வரை செல்லக்கூடியது.70கிமீ வேகத்தில் செல்லக்கூடியது மற்றும் 400மீ ஆழம் வரை செல்லக்கூடியது.250கிகி எடையுடைய வெடிபொருளை சுமந்து செல்லக்கூடியது.
அனைத்து எதிர் நடவடிக்கைகளையும் தாண்டி நீர்மூழ்கிகளை ஆழக்கடலிலும் மற்றும் ஆழமற்ற கடற்பகுதியிலும் தாக்கி அழிக்க கூடியது என டிஆர்டிஓ கூறியுள்ளது.இந்த டோர்பிடோவை தயாரிக்க பாரத் டைனமிக் நிறுவனம் 1187 கோடிகள் அளவிலான ஒப்பந்தத்தை பெற்றுள்ளது.இந்த டோர்பிடோ 95% உள்நாட்டு தயாரிப்பு ஆகும்.
இந்த டோர்பிடோவை நட்பு நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யவும் இந்தியா தயாராக உள்ளது.