லடாக்கில் தமிழக வீரர் வீரமரணம்

திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டையை சேர்ந்த இராணுவ வீரர் பிரித்திவிராஜா (21) அவர்கள் லடாக் எல்லையில் வீரமரணம் அடைந்துள்ளார்.

லடாக்கில் பனி காலம் தொடங்கியதை அடுத்து அங்கு பணிகள் தொடர்வது வீரர்களுக்கு சவாலான பணியாக உள்ளது.சீனப்பிரச்சனை காரணமாக இராணுவ வீரர்கள் அளவுக்கும் அதிகமாக அங்கு குவிக்கப்பட்டுள்ளனர்.

அங்கு அனைத்து வீரர்களுக்கு தேவையான வசதிகள் தற்போது தான் ஏற்படுத்தப்பட்டு வருகின்றன.

இந்நிலையில் லடாக்கில் பணிபுரிந்து வந்த பிரித்வி அவர்களுக்கு மூச்சுதிணறல் ஏற்பட்டு அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு அங்கு உயிரிழந்துள்ளார்.

இதனையடுத்து அவரது உடல் தனிவிமானம் மூலம் அவரது சொந்த ஊருக்கு கொண்டு வரப்பட்டது.

அங்கு முழு இராணுவ மரியாதையுடன் அவரது உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது.

நமது பக்கத்தின் சார்பாக வீரவணக்கம் செலுத்துகிறோம்.