கல்வாரி ரக நீர்மூழ்கி; ஒரு பார்வை

கடற்படையில் கிட்டத்தட்ட 17 ஆண்டுகளுக்கு பிறகு கடந்த 2017 டிசம்பர் 14 அன்று கடற்படையில் கல்வாரி இணைக்கப்பட்டது.அதற்கு முன் 2000ம் ஆண்டு சிந்துராஷ்டிரா என்ற நீர்மூழ்கி இணைக்கப்பட்டது தான் கடைசி.

கடற்படையை நவீனப்படுத்த நவீன நீர்மூழ்கிகளின் தேவை உணரப்பட்டது.அதன் பிறகு புரோஜெக்ட் 75 திட்டத்தின் கீழ் அதை பெறவும் இந்திய கடற்படை முடிவு செய்தது.

பிரான்சின் naval defence மற்றும் energy company DCNS நிறுவனத்தின் உதவியுடன் இந்த நீர்மூழ்கி கப்பல்கள் மும்பையில் உள்ள மசகான் கப்பல் கட்டும் தளத்தால் கட்டப்பட்டு வருகிறது.

முதல் இரு நீர்மூழ்கிகளான கல்வாரி மற்றும் காந்தேரி கடற்படையில் முழு செயல்பாட்டில் உள்ளன.கல்வாரி கடந்த 2017 டிசம்பர் மாதம் 14ம் தேதியும்,காந்தேரி 28 செப்டம்பர் 2019ல் படையில் இணைக்கப்பட்டது.

கரன்ஞ்,வேலா மற்றும் வகிர் ஆகிய மூன்று நீர்மூழ்கிகளும் தற்போது கடற்சோதனையில் இருக்க கடைசி நீர்மூழ்கியான வக்சீர் தற்போது கட்டப்பட்டு வருகிறது.

கடற்தரைப் பரப்பு எதிர்ப்பு, நீர்மூழ்கி எதிர்ப்பு, உளவு தகவல் சேகரிப்பு, கண்ணிவெடி விதைப்பு மற்றும் ஏரியா கண்காணிப்பு என பலவகையான ஆபரேசன்களுக்கு ஏற்றது இந்த ஸ்கார்பின் ரக நீர்மூழ்கி.

67.5மீ நீளமும் , 12.3மீ உயரமும் மற்றும் 6.2மீ அகலமும் கொண்டது.கடற்தரைப் பரப்பில் மணிக்கு 20கிமீ வேகமும், மூழ்கிய நிலையில் மணிக்கு 37கிமீ வேகமும் செல்லக்கூடியது.மணிக்கு 15கிமீ என்ற வேகத்தில் 12000கிமீ வரை சுற்றி வரக்கூடியது.

ஒரு நீர்மூழ்கியை இயக்க 35 மாலுமிகளும்,8 அதிகாரிகளும் தேவைப்படுவர்.

கப்பலில் 533மிமீ அளவுள்ள ஆறு டோர்பிடோ செலுத்தும் குழல்கள் உள்ளன.தற்போது கல்வாரி ரக நீர்மூழ்கிகளில் பழைய SUT டோர்பிடோக்கள் தான் உள்ளன.புதிய டோர்பிடோக்கள் வாங்க முயற்சிகள் நடைபெற்று வருகின்றன.இந்த டோர்பிடோக்கள் 2கிமீ வரை செல்லக்கூடியது.

கப்பல் எதிர்ப்பு பணிக்காக தற்போது SM.39 Exocet anti-ship ஏவுகணைகள் உள்ளன.இவை கிட்டத்தட்ட சீ ஸ்கிம்மில் மோடில் 200கிமீ வரை சென்று தாக்க கூடியது.

தற்போது இந்த ஆறு நீர்மூழ்கிகளுக்கு அடுத்த படியாக பி-75ஐ திட்டத்தில் மேலதிக ஆறு நீர்மூழ்கிகள் கட்ட திட்டமிடப்பட்டுள்ளன.