அதிரடி: பத்து மாதங்களில் 200 பயங்கரவாதிகள்

  • Tamil Defense
  • November 2, 2020
  • Comments Off on அதிரடி: பத்து மாதங்களில் 200 பயங்கரவாதிகள்

காஷ்மீரில் கடந்த பத்து மாதங்களில் மட்டும் சுமார் 200 பயங்கரவாதிகளை வீரர்கள் வீழ்த்தியுள்ளனர்.

பயங்கரவாத ஊடுருவல்களை தடுக்கவும்,காஷ்மீரில் உள்ள பயங்கரவாதிகளை வீழ்த்தவும் காஷ்மீர் காவல்துறை , சிஆர்பிஎப் மற்றும் இராணுவம் இணைந்த படைகள் பல்வேறு முயற்சிகளை எடுத்து வருகின்றன.

கடந்த ஜீன் மாதத்தில் மட்டுமே 49 பயங்கரவாதிகளை பாதுகாப்பு படைகள் வீழ்த்தியுள்ளன.ஏப்ரலில் 28 பயங்கரவாதிகளும்,ஜீலையில் 21 மற்றும் அக்டோபரில் 21 பயங்கரவாதிகளும் வீழ்த்தப்பட்டுள்ளனர்.