Day: November 16, 2020

இரண்டாம் கட்ட மலபார் பயிற்சி நாளை தொடக்கம்

November 16, 2020

குவாட் நாடுகள் பங்குபெறும் மலபார் போர்பயிற்சி இரண்டு கட்டங்களாக நடைபெற்று வருகிறது.முதல் கட்டம் நடந்து முடிந்த வேளையில் தற்போது நாளை இரண்டாம் கட்ட பயிற்சி நாளை நடைபெற உள்ளது. மேலும் இரண்டாம் கட்ட பயிற்சியில் கலந்து கொள்ள அமெரிக்காவின் நிமிட்ஸ் விமானம் தாங்கி கப்பல் வந்துள்ளது. இந்தியா சார்பில் ஐஎன்எஸ் விக்ரமாதித்யா,ஐஎன்எஸ் கொல்கத்தா,ஐஎன்எஸ் சென்னை ,ஐஎன்எஸ் தல்வார், ஐஎன்எஸ் தீபக், ஐஎன்எஸ் காந்தேரி ஆகிய கப்பல்கள் கலந்து கொள்ள உள்ளன. அமெரிக்கா சார்பில்USS Nimitz விமானம் தாங்கி […]

Read More

புதிய P-8Iஐ விமானம் பெற உள்ள கடற்படை

November 16, 2020

அமெரிக்காவிடம் இந்தியா மேலதிகமாக ஆர்டர் செய்த P-8I Poseidon விமானம் நான்கில் ஒரு விமானம் இந்த மாதம் இந்தியா வர உள்ளது.இந்திய பெருங்கடல் பகுதியில் ரோந்து மற்றும் கண்காணிப்பை அதிகரிக்க இந்திய கடற்படை பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. ஏற்கனவே எட்டு விமானங்கள் ஆர்டர் செய்யப்பட்டு படையில் இணைக்கப்பட்டுள்ள நிலையில் மேலதிக நான்கு விமானங்கள் ஆர்டர் செய்யப்பட்டன.தற்போது நான்கில் முதல் விமானம் இந்த மாதம் இறுதியில் வர உள்ளது.அடுத்த மூன்று விமானங்களும் அடுத்த வருடம் படையில் இணையும். […]

Read More

கன்னர் சுபோத் கோஷ் அவர்களின் இறுதி பயணம்

November 16, 2020

பாக் தாக்குதலில் வீரமரணம் அடைந்த இராணுவ வீரர் கன்னர் சுபோத் கோஷ் அவர்களுக்கு இறுதி மரியாதை செலுத்தப்பட்டது. முழு இராணுவ மரியாதையுடன் ரகுநாத்பூரில் அவரது திருவுடல் அடக்கம் செய்யப்பட்டது.

Read More

ஹவில்தார் ஹர்தன் அவர்களின் இறுதி பயணம்

November 16, 2020

பாக் தாக்குதலில் வீரமரணம் அடைந்த இராணுவ வீரர் ஹவில்தார் ஹர்தன் சந்திர ராய் அவர்களுக்கூ இறுதி மரியாதை செலுத்தப்பட்டது. முழு இராணுவ மரியாதையுடன் அஸ்ஸாமில் அவரது சொந்த ஊரா் துப்ரியில் அவரது திருவுடல் அடக்கம் செய்யப்பட்டது.

Read More

பிரம்மோஸ் தொடர் சோதனை-அடுத்த மாதம் திட்டம்

November 16, 2020

சீனாவுடனான எல்லை மோதல் தொடர்ந்து வரும் நிலையில் அடுத்த மாத இறுதியில் இந்திய பாதுகாப்பு படைகள் பிரம்மோஸ் ஏவுகணையை தொடர்ச்சியாக சோதனை செய்ய உள்ளன. உலகிலேயே மிக வேகமான சூப்பர் சோனிக் க்ரூஸ் ஏவுகணையான பிரம்மோசின் தாக்கும் தொலைவு தற்போது 300கிமீ இருந்து 450ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது. இந்திய பெருங்கடல் பகுதியில் இந்த சோதனைகள் நடத்தப்பட உள்ளன.கடந்த இரு மாதங்களாகவே டிஆர்டிஓ தொடர்ந்து ஏவுகணை சோதனைகளை செய்து வருகிறது. சில நாட்களுக்கு முன்பு கூட பிரம்மோசின் வான் வகை […]

Read More