குறிப்பிட்ட நேரத்திற்கு முன்னரே S-400 surface-to-air missiles ஏவுகணை அமைப்பை இந்தியாவிற்கு டெலிவரி செய்ய இரஷ்யா முயற்சி செய்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.முதல் தொகுதி எஸ்-400 ஏவுகணை அமைப்பு டெலிவரி அடுத்த வருட இறுதியில் நடைபெற உள்ளது எனினும் அதற்கு முன்னதாகவே இந்த அமைப்புகளை டெலிவரி செய்ய இரஷ்யா முயற்சித்து வருகிறது. மேலும் 200 Kamov Ka-226T வானூர்திகளை இந்திய இராணுவ படைகளுக்காக இணைந்து தயாரிக்கும் ஒப்பந்தம் விரைவில் கையெழுத்தாக உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கடந்த அக்டோபர் […]
Read Moreபுரோஜெக்ட் 75 திட்டத்தின் கீழ் மசகான் கப்பல் கட்டும் தளத்தில் கட்டப்பட்டு வரும் ஐந்தாவது ஸ்கார்பின் ரக நீர்மூழ்கியாக ஐஎன்எஸ் வகிர் கடலில் ஏவப்பட்டது. பிரான்சின் Naval design & DCNS நிறுவனத்துடன் இணைந்து மொத்தம் ஆறு கல்வாரி ரக நீர்மூழ்கிகள் இந்தியாவில் கட்டப்பட்டு வருகிறது.முதல் நான்கு கப்பல்கள் படையில் இணைக்கப்பட்டும் சோதனையிலும் உள்ளன. கல்வாரி,காந்தேரி,கரன்ஜ் மற்றும் வேலா ஆகிய நான்கு நீர்மூழ்கிகளும் ஏற்கனவே ஏவப்பட்டு சில படையிலும் இணைக்கப்பட்டுவிட்டன.தற்போது வகிர் இன்னும் ஒரு வருட காலத்திற்குள் […]
Read Moreகாஷ்மீரின் குப்வாராவில் உள்ள மச்சில் செக்டாரில் இந்திய எல்லைக்குள் ஊடுருவ முயன்ற பயங்கரவாதிகளுக்கும் நமது படைகளுக்கும் ஏற்பட்ட சண்டையில் நான்கு வீரர்கள் வீரமரணம் அடைந்தனர். 18வது மெட்ராஸ் படைப் பிரிவை சேர்ந்த மூன்று இராணுவ வீரர்களும் , 169வது பட்டாலியன் எல்லைப் பாதுகாப்பு படையை சேர்ந்த சுதீப் சர்கார் அவர்களும் வீரமரணம் அடைந்தனர். இந்த சண்டையில் வீரமரணம் அடைந்த பிஎஸ்எப் ஜவான் அவர்களுக்கு வீரவணக்கம் செலுத்தப்பட்டது.
Read Moreஜம்மு காஷ்மீர் யூனியன் பிரதேசத்தின் பூஞ்ச் மாவட்டத்தில் உள்ள எல்லைக் கோடு பகுதியில் கடந்த மூன்று நாட்களாக பாகிஸ்தான் அத்துமீறி துப்பாக்கிச்சூடு நடத்தி வருகிறது. காலை 9 மணி அளவில் பூஞ்ச் மாவட்டத்தின் ஷாபூர்,கிர்னி மற்றும் கஸ்பா செக்டார்களிலும்,ராஜோரி மாவட்டத்தின் நௌசேரா செக்டாரிலும் தாக்குதல் நடத்தி வருகிறது. இந்த தாக்குதலுக்கு இந்திய இராணுவம் சார்பில் கடும் பதிலடி கொடுக்கப்பட்டு வருகிறது. இந்த தாக்குதல்களில் எந்தவித உயிர்ச்சேதமும் ஏற்படவில்லை.
Read Moreஇந்திய இராணுவத்தின் உளவு கார்ப்சின் தேர்ந்த திட்டம் மற்றும் இராணுவ வீரர்களின் தேர்ந்த ஆபரேசன் காரணமாக உல்பா பயங்கரவாத இயக்க தளபதி சரணடைந்துள்ளான். டி.ராஜ்கோவா என்ற அந்த பயங்கரவாதி உல்பா பயங்கரவாதத்தின் இரண்டாம் நிலை தளபதியாக இருந்தவன் ஆவான். அவனிடம் இருந்து பல ஆயுதங்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.
Read Moreஇந்திய சீன எல்லைப் பிரச்சனை நடந்து வரும் நிலையில் இரு நாள் பயணமாக உத்ரகண்ட் சென்றுள்ளார் இராணுவ தளபதி அவர்கள். அங்கு அவர் நமது படைகளின் தயார் நிலை குறித்து ஆய்வு செய்து வருகிறார்.இந்திய சீனா எல்லை பிரச்சனை தொடர்பாக தொடர்ச்சியாக பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வருகின்றன. எட்டாம் கட்ட பேச்சுவார்த்தையின் போது மூன்று படிகளில் படைவிலக்கம் செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது.
Read More