Day: November 1, 2020

2022ல் படையில் இணையும் ருத்ரம் ஏவுகணை

November 1, 2020

இந்தியாவின் முதல் ரேடியேசன் எதிர்ப்பு ஏவுகணையான ருத்ரம் 2022 வாக்கில் படையில் இணைய உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இந்தியாவின் டிஆர்டிஓ மேம்படுத்தியுள்ள இந்த ஏவுகணை சில நாட்களுக்கு முன் சுகாய் விமானத்தில் இருந்து வெற்றிகரமாக பரிசோதனை செய்யப்பட்டது. இந்த ஏவுகணை படையில் இணைக்கப்படுவதற்கு முன் மேலும் ஆறு முதல் ஏழு சோதனைகள் மேற்கொள்ளப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ரேடியேசன் வெளியிடும் இலக்குகளை அழிக்க இந்த ஏவுகணை பயன்படுத்தப்படும்.அதாவது எதிரியின் வான் பாதுகாப்பு அமைப்புகளை அழிக்க இந்த ஏவுகணை பயன்படுத்தப்படும்.

Read More

கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள இந்திய-சீன உறவு

November 1, 2020

இந்திய சீன உறவில் மிக கடுமையான விரிசல் ஏற்பட்டுள்ளதாக வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் அவர்கள் கூறியுள்ளார். சர்தார் வல்லபாய் படேல் அவர்களின் பிறந்த நாளின் போது பேசிய அவர் இந்த தகவலை வெளியிட்டுள்ளார்.1962க்கு பிறகு எல்லையில் பெரிய அளவிலான போர் வெடித்ததில்லை. ஆனால் தற்போது மிக மோசமான நிலை நிலவுகிறது.இரு நாடுகளும் லட்சக்கணக்கில் படைகளை எல்லையில் குவித்துள்ளன. மக்மோகன் எல்லைக் கோடு தான் உண்மையான எல்லையாக உள்ளது.ஆனால் சீனா அதை ஏற்க மறுத்து அருணாச்சல பிரதேச பகுதியை […]

Read More