ருத்ரம் ரேடியேசன் எதிர்ப்பு ஏவுகணை ஏன் முக்கியம் ?

  • Tamil Defense
  • October 10, 2020
  • Comments Off on ருத்ரம் ரேடியேசன் எதிர்ப்பு ஏவுகணை ஏன் முக்கியம் ?

இந்தியாவின் முதல் உள்நாட்டு தயாரிப்பு ரேடியேசன் எதிர்ப்பு ஏவுகணை தான் இந்த ருத்ரம் ஏவுகணை ஆகும்.தற்போது இந்த ஏவுகணையை சுகாய் 30எம்கேஐ விமானத்தில் இருந்து வெற்றிகரமாக சோதனை செய்துள்ளது டிஆர்டிஓ.

ரேடியேசன் எதிர்ப்பு ஏவுகணை என்பது என்ன ?

எதிரியின் வான் பாதுகாப்பு ஏவுகணை அமைப்புகளை அழிப்பது தான் இதன் வேலை.ஒரு வான் பாதுகாப்பு ஏவுகணை அமைப்பில் ரோடர் ,தொலைத் தொடர்பு சிஸ்டம் மற்றும் மற்ற ரேடியோ அதிர்வெண் அமைப்புகள் இருக்கும்.இவற்றை தேடி ,கண்காணித்து அழிப்பது தான் இந்த ஏவுகணையின் பணி ஆகும்.செயற்கைகோள் துணையுடன் இயங்கும் ஜிபிஎஸ் மற்றும் inertial navigation system துணையுடன் ஏவுகணை இயங்கும்.

passive homing head வழிகாட்டும் அமைப்புடன் ரேடியோ அதிர்வெண் இலக்குகளை தேடி ,பகுத்தறிந்து தாக்கும்.இவ்வாறு ஒரு வான் பாதுகாப்பு ஏவுகணை அமைப்பின் பகுதியை (எகா ரேடார் எனக் கொள்வோம்)
அழிக்கும் போது அந்த அமைப்பு செயலிழந்து போகும்.

இலக்கை ஒரு முறை ஏவுகணை லாக் செய்து விட்டால் போதும் இலக்கை நோக்கி பாயும் போது இலக்கு ரேடியேசன் மூலத்தை அணைத்தால் கூட இலக்கை ஏவுகணை தாக்கிவிடும்.ஏவுகணை 100கிமீ வரை செல்லக்கூடியது.

ருத்ரம் ஒரு வான்-தரை இலக்கு ஏவுகணை ஆகும்.எட்டு வருடத்திற்கு முன்பு இந்த ஏவுகணை மேம்பாடு தொடங்கியது.தற்போது வெற்றிகரமாக மேம்படுத்தப்பட்டு போர்விமானத்தில் இணைக்கப்பட்டுள்ளது.தற்போது சுகாயில் வைத்து ஏவப்பட்டு சோதனை செய்யப்பட்டாலும் மற்ற போர்விமானத்திலும் வைத்து ஏவலாம்.

இந்த ஏவுகணையின் மேம்பாடு முழுவதுமே சவாலான பணியாக இருந்ததாக டிஆர்டிஓ அறிவியலாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

ருத்ரம் என்பதற்கு “துயரத்தை நீக்குபவர்” என்பது பொருளாகும்.

எதிரியின் வான் பாதுகாப்பு அமைப்பு ஏவுகணை அழிக்காமல் அந்நாட்டில் நுழைந்து விமானத் தாக்குதல் நடத்துவது ஆக கடினமான பணி ஆகும்.இதை சாத்தியமாக்க தான் ரேடியேசன் எதிர்ப்பு ஏவுகணைகள் தேவையாக உள்ளன.

படையில் இணைப்பதற்கு முன் மேலும் சில சோதனைகள் நடத்தப்பட உள்ளன.