
பாலக்கோட் தாக்குதலுக்கு பிறகு பாக்கின் முன்னனி பிரிகேடுகளை தாக்க தயாராக இருந்தோம் என முன்னாள் விமானப்படை தளபதி தனோவா அவர்கள் கூறியுள்ளார்.
அபிநந்தன் அவர்களை விடுவிக்காவிட்டால் இந்தியா இன்று இரவு 9 மணிக்கு தாக்கும் என பாக்கின் வெளியுறவு அமைச்சர் கூறியதாக பாக் முஸ்லீம் லீக் தலைவர் அயுஸ் சாதிக் கூறிய பிறகு இந்த தகவலை முன்னாள் விமானப்படை தளபதி கூறியுள்ளார்.
அபிநந்தன் அவர்களினன தந்தை மற்றும் நான் ஒன்றாக பணியாற்றியவர்கள்.அபிநந்தன் பாக் பக்கத்தில் விழுந்த போது நாங்கள் அஜய் அகுஜாவை தான் திரும்ப பெற முடியவில்லை ஆனால் அபிநந்தன் அவர்களை கண்டிப்பாக திரும்ப பெறுவோம் என கூறினேன் என அவர் கூறியுள்ளார்.அதற்கு இரு சாத்தியக்கூறுகள் இருத்தன.ஒன்று டிப்ளோமேட்டிக் பேச்சுவார்த்தை மற்றொன்று இராணுவ ரீதியாக மிரட்டல் என அவர் கூறியுள்ளார்.