இந்தியா கட்டி வரும் முதல் விமானம் தாங்கி கப்பலான ஐஎன்எஸ் விக்ராந்த் வரும் டிசம்பர் முதல் கடற்சோதனை செய்ய உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
இந்த சோதனையின் போது கப்பலில் பொருத்தப்பட்டுள்ள அமைப்புகள் மற்றும் ஆயுதங்கள் சோதனை செய்யப்படும் என்ற தகவல்கள் வெளியாகியுள்ளது
மேலும் பேசின் சோதனைகள் கடந்த செப்டம்பர் மாதம் தொடங்கவிருந்த நிலையில் கோவிட்-19 காரணமாக தாமதம் ஏற்பட்டது.
அதன் பிறகான நிலை காரணமாக மொத்த செயல்பாட்டின் வேகமும் குறைந்தது.தற்போது திட்டமிட்டப்படி அனைத்தும் தொடரும் எனில் வரும் டிசம்பரில் இந்த சோதனைகள் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
விக்ராந்த் 2022ம் ஆண்டு இறுதியில் படையில் இணைக்கப்படலாம் என்பது எனது கணிப்பு.