சீனாவிற்கு எதிராக தைவானுக்கு ஆயுதங்களை அள்ளி வழங்கும் அமெரிக்கா

  • Tamil Defense
  • October 22, 2020
  • Comments Off on சீனாவிற்கு எதிராக தைவானுக்கு ஆயுதங்களை அள்ளி வழங்கும் அமெரிக்கா

சீனாவுக்கு எதிராக தனது பலத்தை அதிகரித்து வரும் தைவானிற்கு உதவும் விதமாக சுமார் 1 பில்லியன் டாலர் அளவிலான அதிநவீன வான்-தரை இலக்குகளை தாக்கும் ஏவுகணைகளை அமெரிக்கா வழங்க உள்ளது.

வானில் இருந்து தரை இலக்குகளை நோக்கி ஏவப்படக்கூடிய AGM-84H SLAM-ER க்ரூஸ் ஏவுகணைகளை அமெரிக்கா வழங்க உள்ளது.இது தவிர ஆறு MS-110 air reconnaissance pods மற்றும் 11 M142 மொபைல் இலகுரக ராக்கெட் லாஞ்சர்கள் ஆகியவையும் வழங்க உள்ளது அமெரிக்கா.

நிலையாக உள்ள அல்லது நகர்ந்து கொண்டிருக்கும் தரை இலக்கை அனைத்து காலநிலையிலும் இரவும் பகலும் தாக்கியழிக்கும் திறனை தைவானிற்க்கு SLAM-ER வழங்கும்.

தைவானை எந்த நேரத்திலும் தாக்கும் எண்ணத்தில் சீனா இருக்கும் நேரத்தில் இந்த உதவியை அமெரிக்கா செய்துள்ளது.