காஷ்மீரின் பாம்போரில் சிஆர்பிஎப் வீரர்கள் மீது தாக்குதல்

  • Tamil Defense
  • October 5, 2020
  • Comments Off on காஷ்மீரின் பாம்போரில் சிஆர்பிஎப் வீரர்கள் மீது தாக்குதல்

ஸ்ரீநகரின் புறப்பகுதியில் பாம்போர் எனும் பகுதியில் ரோந்து சென்ற 110வது பட்டாலியன் சிஆர்பிஎப் மீது பயங்கரவாதிகள் தாக்கியதில் 2 சிஆர்பிஎப் வீரர்கள் வீரமரணம் அடைந்துள்ளனர்.

இந்த தாக்குதலில் மூன்று வீரர்கள் காயமடைந்துள்ளனர்.காயமடைந்த வீரர்கள் 92வது தள மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர்.

தற்போது இராணுவத்தின் 50வது இராஷ்டீரிய ரைபிள்ஸ் மற்றும் காவல் துறையினர் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு வருகின்றனர்.