
பாலக்கோட் வான் வழி தாக்குதலில் பங்கேற்ற மூன்று விமானப்படை அதிகாரிகளுக்கு யுத்த சேவா விருது வழங்கி கௌரவிக்கப்பட்டுள்ளது.
88வது விமானப்படை தினமான இன்று மூன்று வீரர்களுக்கும் வீரதீர விருது வழங்கப்பட்டது.
ஸ்குவாட்ரான் லீடர் மின்டி அகர்வால்
க்ரூப் கேப்டன் ஹான்செல் செகுரா
க்ரூப் கேப்டன் ஹேமன்த் குமார்
ஆகிய மூன்று அதிகாரிகளுக்கும் விருதுகள் வழங்கப்பட்டது.
போரின் போது சிறப்பாக செயல்பட்ட வீரர்களுக்கு யுத்த சேவா விருது வழங்கப்படும்.
ஸ்குவாட்ரான் லீடர் மின்டி அகர்வால் அவர்கள் விமானப்படையில் பிளைட் கன்ட்ரோலராக உள்ளார்.பாலக்கோட்டிற்கு பதிலடியாக பாக் இந்தியாவிற்குள் புகுந்து தாக்கிய போது விங் கமாண்டர் அபிநந்தனை வழிநடத்திய குழுவில் இடம்வகித்தவர் ஆவார்.
40 சிஆர்பிஎப் வீரர்கள் வீரமரணம் அடைந்ததற்கு பதிலடியாக பாக் மீது இந்த தாக்குதலை இந்தியா தொடுத்தது.