
வெள்ளியன்று பாதுகாப்பு படைகள் என்கௌன்டர் வீடியோ ஒன்று வெளியிட்டன.அதில் ஒரு பயங்கரவாதி வீரர்கள் முன்னிலையில் சரணடைவது பதிவு செய்யப்பட்டிருந்தது.
“ஜகாங்கீர் ஆயுதங்களை போட்டுவிட்டு சரணடைந்துவிடு.நீ மறைந்திருக்கும் இடத்தை நாங்கள் சுற்றிவளைத்துவிட்டோம்.உனக்கு எதும் நேராது என உறுதியளிக்கிறோம்” என ஒரு வீரர் பயங்கரவாதியை சரணடைய கூறுவார்.
உங்கள் குடும்பத்திற்காகவாது சரணடைந்து விடு என வீரர் மறுபடியும் கூறுவார்.ஜகாங்கீர் தனது மறைவிடத்தை விட்டு ட்ரௌசருடன் வெளிவருவது தெரிந்த பிறகு அங்கு வேறு யாரும் உள்ளனரா என வீரர் ஒருவர் கேட்பார்.
“அவனுக்கு தண்ணீர் கொடுங்கள்.கொஞ்சம் தனித்து இருங்கள்.அமைதியாக இருங்கள்.உனக்கு ஒன்றும் ஆகாது” என வீரர் ஒருவர் கூறுவார்.
மற்றொரு வீடியோவில் ஜகாங்கீரை உயிருடன் மீட்டமைக்காக அவரின் தந்தை பாதுகாப்பு படை வீரர்களின் காலில் விழுவது பதிவு செய்யப்பட்டிருந்தது.
“உங்கள் மகன் நல்ல வேலை செய்திருக்கிறான்.அவனது இறந்தகாலம் மறக்கப்படும்.அவன் மீண்டும் பயங்கரவாத பாதையை தேர்ந்தெடுக்காமல் பார்த்து கொள்ளுங்கள்” என வீரர் ஜகாங்கீர் தந்தையிடம் உரையாடுவது பதிவு செய்யப்பட்டிருந்தது.
ஜகாங்கீர் மூன்று நாட்களுக்கு முன் தான் பயங்கரவாத இயக்கத்தில் இணைந்தான் என்பது குறிப்பிடத்தக்கது.