கில்ஜித் பல்டிஸ்தான் பகுதியை பாக் மேப்பில் இருந்து நீக்கிய சௌதி அரேபியா

  • Tamil Defense
  • October 28, 2020
  • Comments Off on கில்ஜித் பல்டிஸ்தான் பகுதியை பாக் மேப்பில் இருந்து நீக்கிய சௌதி அரேபியா

பாக் ஆக்கிரமிப்பு காஷ்மீர் மற்றும் கில்ஜிட் பல்டிஸ்தான் பகுதிகளை பாக்கில் இருந்து நீக்கி புது மேப்பை சௌதி அரேபியா வெளியிட்டுள்ளதாக பாக் ஆக்கிரமிப்பு காஷ்மீரை சேர்ந்த அம்ஜத் ஆயுப் மிர்சா ( activist ) கூறியுள்ளார்.

இந்தியாவுக்கான சௌதியின் தீபாவளி பரிசு இது என அவர் ட்வீட் செய்துள்ளார்.சௌதி அரேபியா ஜி-20 மாநாடு நடத்துவதை முன்னிட்டு 20 ரியால் பணத்தை வெளியிட்டுள்ளது.அதில் காணப்படும் உலக மேப்பில் கில்ஜித் பல்டிஸ்தான் பாக் உடன் இல்லாமல் இந்தியாவின் காஷ்மீருடன் இணைந்திருப்பதாக உள்ளது.

பாக் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் வரும் நவம்பரில் தேர்தல் நடத்த பாக் திட்டமிட்டுள்ளது.இதை இந்தியா மிக கடுமையாக எதிர்த்துள்ளது.

பாக் ஆக்கிரமிப்பு காஷ்மீர் கில்ஜித் பல்டிஸ்தான் பகுதிகள் இந்தியாவிற்கு சொந்தமானவை என இந்தியா அழுத்தமாக கூறியுள்ளது.