ஐந்தே வாரத்தில் ஆறு வெற்றிகரமான சோதனைகள்-டிஆர்டிஓ தொடர் சாதனை

  • Tamil Defense
  • October 10, 2020
  • Comments Off on ஐந்தே வாரத்தில் ஆறு வெற்றிகரமான சோதனைகள்-டிஆர்டிஓ தொடர் சாதனை

சீனாவுடனான மோதல் தொடர்ந்து வரும் நிலையில் இந்தியாவின் டிஆர்டிஓ நிறுவனம் தொடர் ஏவுகணை சோதனையில் ஈடுபட்டு வருகிறது.கடந்த ஐந்தே வாரத்தில் இந்தியா ஆறு ஏவுகணை சோதனைகளை வெற்றிகரமாக சோதித்துள்ளது.

கடந்த செப்டம்பர் 8 அன்று இந்தியா Hypersonic Technology Demonstrator Vehicle (HSTDV) ஐ வெற்றிகரமாக சோதனை செய்தது.அதன் பிறகு செப்டம்பர் 30 அன்று தூரம் அதிகரிக்கப்பட்ட பிரம்மோஸ் ஏவுகணை வெற்றிகரமாக சோதனை செய்யப்பட்டது.

செப்டம்பர் 23 அன்று டேங்க் எதிர்ப்பு ஏவுகணை அர்ஜீன் டேங்கில் இருந்து சோதனை செய்யப்பட்டது.அதன் பிறகு அக்டோபர் 1 அன்று அணுஆயுத சௌரியா ஏவுகணையும் , அக்டோபர் 5 அன்று ஸ்மார்ட் ஏவுகணையும் ,கடைசியாக ரேடியேசன் எதிர்ப்பு ஏவுகணையும் பரிசோதனை செய்யப்பட்டது.

இதுதவிர மேலும் பல சோதனைகள் தொடர உள்ளன.அடுத்ததாக 800கிமீ செல்லும் நிர்பயா ஏவுகணை சோதனை செய்யப்பட உள்ளது.