எல்லைப் பிரச்சனை தொடர்பான ஏழாம் கட்ட பேச்சுவார்த்தை

  • Tamil Defense
  • October 12, 2020
  • Comments Off on எல்லைப் பிரச்சனை தொடர்பான ஏழாம் கட்ட பேச்சுவார்த்தை

இந்திய சீன எல்லைப் பிரச்சனை காரணமாக ஏழாம் கட்ட பேச்சுவார்த்தை இன்று சூசுல் செக்டாரின் சீனப்பகுதியில் நடைபெறுகிறது.12 மணிக்கு தொடங்க உள்ள இந்த பேச்சுவார்த்தையில் இந்திய குழுவிற்கு கார்ப்ஸ் கமாண்டர் லெப் ஜென் ஹரிந்தர் சிங் தலைமை தாங்குகிறார்.

வெளியுறவு அமைச்சகத்தின் இணை செயலர் நவீன் ஸ்ரீவத்சவா அவர்களும் இந்த பேச்சுவார்த்தையில் கலந்து கொள்ள உள்ளார்.லெப் ஜென் ஹரிந்தர் சிங் கலந்து கொள்ள உள்ள கடைசி பேச்சுவார்த்தை இதுதான்.இதன் பிறகு அவரது இடத்தை லெப் ஜென் பிஜிகே மேனன் நிரப்புவார்.

சென்ற பேச்சுவார்த்தையின் போது தெற்கு பங்கோங்கின் மகர் ஹில்,முஹ்பாரா மற்றும் ரேசங் லா போன்ற பகுதிகளில் இருந்து இந்திய இராணுவம் வெளியேற சீனா அழுத்தம் தெரிவித்தது.ஆனால் இந்த பேச்சுவார்த்தையின் போது சீனா அவ்வாறு எதேனும் அழுத்தம் தெரிவித்தால் இந்தியக் குழு கண்டிப்பாக எதிர்க்கும் என்ற தகவல் வெளியாகியுள்ளது.

பேச்சுவார்த்தை நடைபெற்று வரும் வேளையிலும் இரு நாடுகளும் வர உள்ள குளிர்காலத்தை எதிர்கொள்ள தயாராகி வருகின்றன.அனைத்து பேச்சுவார்த்தைகளிலுமே இரு நாடுகளும் ஒரே நேரத்தில் படை விலக்கம் மேற்கொள்ள வேண்டும் என்ற கோரிக்கையை தான் விடுத்து வருகிறது.

செப்டம்பர் 21 பேச்சுவார்த்தையின் போது இரு நாடுகளுமே மேலதிக படைகளை அனுப்ப கூடாது என்ற கோரிக்கைக்கு ஒப்புக்கொண்டன.