சீன எல்லையில் உள்ள வீரர்களுக்கு முதல் தொகுதி சிக் சார் துப்பாக்கிகள்

முதல் தொகுதி 72500 சிக் சார் துப்பாக்கிகள் ஏற்கனவே அமெரிக்காவிடம் இருந்து பெறப்பட்டு பயங்கரவாத தடுப்பு நடவடிக்கைளில் உள்ள வீரர்களுக்கு வழங்கப்பட்ட பிறகு இரண்டாம் தொகுதி துப்பாக்கிகள் தற்போது பெறப்பட்டு சீன எல்லையில் உள்ள வீரர்களுக்கு வழங்கப்பட உள்ளது.

சமீபத்தில் நடந்து முடிந்த இராணுவ கொள்முதல் கூட்டத்தில் அவசர நிலையாக இரண்டாம் தொகுதி 72500 சிக் சார் துப்பாக்கிகள் பெற அனுமதி வழங்கப்பட்டது.

எதிரிகளை சந்திக்கும் முன்னனி களத்தில் உள்ள வீரர்களுக்கு சிறந்த துப்பாக்கிகள் வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

தற்போது OFB தயாரிப்பு இன்சாஸ் 5.56 துப்பாக்கிகளை தான் இராணுவ வீரர்கள் உபயோகித்து வருகின்றனர்.

மேலும் வீரர்களுக்கு வழங்க ஏகே-203 துப்பாக்கிகள் விரைவில் இந்தியாவில் தயாரிக்கப்பட உள்ளன.இவை அமேதி ஆர்டினன்ஸ் பேக்டரியில் தயாரிக்கப்படும்.

இது தவிர இஸ்ரேலிடம் இருந்து 16000 இலகுரக இயந்திர துப்பாக்கி பெறப்பட உள்ளன.