
பேரன்ட் கடற்பகுதியில் இரஷ்யா தனது ஷிர்கான் ஹைப்பர் சோனிக் ஏவுகணையை வெற்றிகரமாக சோதனை செய்துள்ளது.இரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் அவர்களின் 68வது பிறந்த நாள் அன்று இரஷ்யா இந்த சோதனையை செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.
வடக்கு இரஷ்ய பகுதியின் ஓயிட் கடற்பகுதியில் அட்மிரல் கோர்ஷ்கோவ் கப்பலில் இருந்து இந்த ஏவுகணை ஏவி பரிசோதிக்கப்பட்டுள்ளது.பேரன்ட் கடற்பகுதியில உள்ள ஒரு இலக்கை நோக்கி இந்த ஏவுகணை ஏவப்பட்டுள்ளது.மேலும் ஏவுகணை இலக்கை துல்லியமாக தாக்கியதாக இரஷ்ய அதிகாரிகள் கூறியுள்ளனர்.
4.30 நொடிகளிலேயே 450கிமீ கடந்து இலக்கை வெற்றிகரமாக தாக்கியுள்ளது.ஏவுகணை மாக் 8 என்ற ஹைப்பர் சோனிக் வேகத்தில் பயணித்துள்ளது குறிப்பிடத்தக்கது.