வெறித்தனம்; ருத்ரம் ரேடியேசன் எதிர்ப்பு ஏவுகணை சோதனை

  • Tamil Defense
  • October 9, 2020
  • Comments Off on வெறித்தனம்; ருத்ரம் ரேடியேசன் எதிர்ப்பு ஏவுகணை சோதனை

டிஆர்டிஓ இன்று ருத்ரம் ரேடியேசன் எதிர்ப்பு ஏவுகணைையை வெற்றிகரமாக சோதனை செய்துள்ளது.சுகாய்-30 விமானத்தில் இருந்து இந்த ஏவுகணை வெற்றிகரமாக சோதனை செய்யப்பட்டுள்ளது.
இந்த ஏவுகணையை நமது டிஆர்டிஓ அமைப்பு மேம்படுத்தியுள்ளது.

இந்த ஏவுகணை நமது விமானப்படைக்கு வான் ஆதிக்கம் மற்றும் டாக்டிகல் திறனை அளிக்கும்.

எதிரியின் வான் பாதுகாப்பு ஏவுகணை ஒடுக்குதல் அல்லது அழிப்பதற்கு இந்த ஏவுகணை உபயோகிக்கப்படும்.எதிரியின் கண்காணிப்பு ரேடார்கள்,தொலைதொடர்ப்பு ரேடார்கள் போன்றவைகளை அழிக்க இந்த ஏவுகணை பயன்படுத்தப்படும்.

ஒரு வான் பாதுகாப்பு ஏவுகணை அமைப்பை அழிப்பது என்பது எளிதான காரியமல்ல.

மிராஜ்-2000, ஜாகுவார்,ஹால் தேஜஸ் மற்றம் சுகாய் விமானங்களில் வைத்து இந்த ஏவுகணையை ஏவலாம்..இது விமானப்படைக்கு சக்தியை கூட்டும் ஆயுதமாக இருக்கும் என்பதில் ஐயமில்லை.