44 புதிய முக்கிய பாலங்களை திறந்து வைக்கும் இராணுவ அமைச்சர்

  • Tamil Defense
  • October 12, 2020
  • Comments Off on 44 புதிய முக்கிய பாலங்களை திறந்து வைக்கும் இராணுவ அமைச்சர்

இராணுவ அமைச்சர் இராஜ்நாத் சிங் அவர்கள் இன்று முக்கிய 44 பாலங்களை திறந்து வைக்க உள்ளார்.

எல்லைச் சாலைகள் அமைப்பு கட்டிய இந்த பாலங்களை வீடியோ கான்பெரன்ஸ் மூலமாக திறந்து வைக்கிறார் அமைச்சர் இராஜ்நாத் சிங்.

7 மாநிலங்கள்/யூனியன் பிரதேசங்களில் இந்த பாலங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.

இவற்றுள் அதிகபட்சமாக ஜம்மு காஷ்மீர் யூனியன் பிராந்தியத்தில் பத்து பாலங்களும் ,லடாக் பிராந்தியத்தில் 7 பாலங்களும் ஏற்படுத்தப்பட்டுள்ளன.

அதற்கு பிறகு ஹிமாச்சலில் 2 முக்கிய பாலங்களும்,பஞ்சாபில் நான்கும்,உத்ரகண்டில் எட்டு பாலங்களும் ஏற்படுத்தப்பட்டுள்ளன.

தவிர அருணாச்சலில் எட்டு பாலங்களும், சிக்கிமில் நான்கு பாலங்களும் ஏற்படுத்தப்பட்டுள்ளன.