விமானப்படை தின கண்காட்சியில் பறக்க உள்ள ரபேல் விமானங்கள்

  • Tamil Defense
  • October 3, 2020
  • Comments Off on விமானப்படை தின கண்காட்சியில் பறக்க உள்ள ரபேல் விமானங்கள்

ரபேல் இந்தியா வந்தடைந்த பிறகு பொது நிகழ்ச்சியில் பங்கேற்பது இதுவே முதல் முறை ஆகும்.வரும் அக்டோபர் 8 அன்று இந்திய விமானப்படை தினம் கொண்டாடப்பட உள்ளது.

ரபேல் ஒரு 4.5 தலைமுறை இரட்டை என்ஜின் பலபணி போர் விமானம் ஆகும்.வான் ஆதிக்கம்,தாக்குதல், கப்பல் எதிர்ப்பு,அணு ஆயுத தாக்குதல் என அனைத்துவித நடவடிக்கைகளுக்கும் இந்த விமானத்தை பயன்படுத்த முடியும்.

ரபேல் விமானங்கள் தங்கள் பணியை தொடங்கியுள்ளது.லடாக் பகுதியில் ரோந்து சென்று வருகிறது என்பதை ஏற்கனவே பதிவு செய்திருந்தோம்.மொத்தம் 36 விமானங்கள் ஆர்டர் செய்திருந்த நிலையில் தற்போது 5 விமானங்கள் படையில் இணைக்கப்பட்டுள்ளன.

கடந்த ஜீலை 29ல் இந்தியா வந்த விமானங்கள் கடந்த செப்டம்பர் 10ல் படையில் இணைக்கப்பட்டன.தற்போது விமானப்படையின் 17வது ஸ்குவாட்ரான் ஆன கோல்டன் ஏரோசில் ரபேல் விமானங்கள் இணைக்கப்பட்டுள்ளது.