திறந்த வெளிப்படையான இந்தோ-பசிபிக்; நால்வர் கூட்டனி முடிவு

  • Tamil Defense
  • October 7, 2020
  • Comments Off on திறந்த வெளிப்படையான இந்தோ-பசிபிக்; நால்வர் கூட்டனி முடிவு

இந்தோ-பசிபிக் பிராந்தியத்தில் சீனாவின் ஆதிக்கத்தை முறியடித்து திறந்த வெளிப்படையான பிராந்தியமாக மாற்ற நால்வர் கூட்டனி இணைந்து செயல்பட முடிவு செய்யப்பட்டுள்ளது.

டோக்கியோவில் நடைபெற்ற சந்திப்பிற்கு இந்த தகவலை ஜப்பான் வெளியிட்டுள்ளது.ஜப்பான் பிரதமர் யோஷிஹிடே சுகா, இந்திய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர், அமெரிக்க செயலர் மைக் பாம்பியோ மற்றும் ஆஸ்திரேலிய வெளியுறவு அமைச்சர் மாரிஸ் கூட்டத்தில் கலந்து கொண்டுள்ளனர்.

இந்தோ பசிபிக் பிராந்தியத்தில் அமைதியையும் நிலைத் தன்மையையும் நிலைநாட்ட நான்கு நாடுகளும் உறுதி கொண்டுள்ளன.

இந்தோ-பசிபிக் பிராத்தியத்திலும் ,தென்சீனக்கடல் பகுதி மற்றும் கிழக்கு லடாக் பகுதியில் சீனா ஆக்கிரமிப்பு செய்ய முயன்று வரும் நிலையில் இந்த சந்திப்பு நடைபெற்றுள்ளது.