இந்தியா தாக்கும் என நடுங்கிய பாகிஸ்தான்-வெளியான உண்மை

  • Tamil Defense
  • October 29, 2020
  • Comments Off on இந்தியா தாக்கும் என நடுங்கிய பாகிஸ்தான்-வெளியான உண்மை

கடந்த 2019ம் ஆண்டு பிப்ரவரி 14 அன்று பாக் பயங்கரவாதிகள் நமது சிஆர்பிஎப் வீரர்கள் சென்ற வாகனங்கள் மீது தாக்குதல் நடத்தியதில் 40 சிஆர்பிஎப் வீரர்கள் வீரமரணம் அடைந்தனர்.

இதற்கு பதிலடியாக 26 பிப்ரவரி 2019ல் இந்திய விமானப்படை பாக்கின் பாலக்கோட்டில் இருந்த பயங்கரவாத முகாம்கள் மீது குண்டுவீசி தகர்த்தன.

27 பிப்ரவரியில் இதற்கு பதிலடி என பாக் விமானப்படைகள் இந்திய வான் எல்லைக்குள் நுழைந்தன.இதை விரட்ட இந்திய விமானங்கள் பறந்தன.விங் கமாண்டர் அபி அவர்கள் ஒரு எப்-16 விமானத்தை சுட்டு வீழ்த்தினார்.அவரது மிக்-21 விமானமும் சுட்டு வீழ்த்தப்பட அவர் பாக் படைகளால் கைது செய்ய பட்டார்.

அவர் அங்கு சித்ரவதை செய்யப்பட்டது உலக அளவில் பெரிய கண்டனத்திற்கு உள்ளாகியது.மேலும் அவர் கைது தொடர்பான பல்வேறு கானொளிகளும் இணையம் முழுதும் பரப்பப்பட்டன.இதில் அவர் தாக்கப்படும் கானொளியும் அடங்கும்.

இது குறித்து ஒரு சுவாரசிய நிகழ்வு தற்போது வெளியாகியுள்ளது.அந்நாட்டின் வெளியுறவு அமைச்சர் அப்போது இந்தியா பிப்ரவரி 27ல் பாகிஸ்தானை தாக்க உள்ளது என கூறிய போது பாக் இராணுவ தளபதி கமர் பாஜ்வா பயத்தில் ஆடியுள்ளார்.பயத்தில் அவரது கால்களில் உதறல் காணப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

அப்போது பாகிஸ்தானுக்கு வேறு வழியே இருக்கவில்லை.விங் கமாண்டர் அபி அவர்களை விடுவித்து அமைதியை நிலை நாட்டுவதை தவிர வேறு வழி இருக்கவில்லை என அந்நாட்டு தேசிய அசம்பிளியில் பாக் முஸ்லீம் லீக் கட்சி தலைவர் அயுஷ் சதீக் கூறியுள்ளார்.

பாக் விங் கமாண்டர் அபி அவர்களை விடுவிக்கவில்லை எனில் அந்த நாள் இரவு 9 மணிக்கு இந்தியா பாக்கை தாக்கும் என அன்றைய தின கூட்டத்தில் பேசியதாக அவர் கூறியுள்ளார்.