
பாகிஸ்தானுக்காக உளவு பார்த்த விவகாரத்தில் காஷ்மீரின் சம்பா மாவட்டத்தில் இருந்து ஒருவன் கைது செய்யப்பட்டுள்ளான்.
காஷ்மீரில் உள்ள முக்கிய இராணுவம் தொடர்பான கட்டுமானங்கள் குறித்து பாகிஸ்தானின் ஐஎஸ்ஐ உளவுத்துறைக்கு அவன் தகவல்கள் தெரிவித்து வந்துள்ளான்.
குல்ஜீத் சர்மா என்ற 21வயது இளைஞன் தான் பாதுகாப்பு தகவல்களை துபாயில் உள்ள ஒரு பெண்ணுக்கு அனுப்பியுள்ளான்.
சமூக வலை தளங்கள் மூலம் இருவருக்கும் பழக்கம் ஏற்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்பட்டு தற்போது விசாரணை நடைபெற்று வருகிறது.