
பாக் தொடர்ந்து காஷ்மீருக்குள் ஆயுதங்களை கடத்த முயற்சி செய்து வருகிறது.இதன் மூலம் காஷ்மீரில் அமைதியின்மையை உருவாக்குவதே பாக்கின் குறிக்கோள்.அதன் படி கடந்த ஐந்தே நாட்களில் பாக் இரு முறை காஷ்மீருக்குள் ஆயுதங்களை கடத்த முயற்சி செய்துள்ளது.இதை இந்திய இராணுவம் வெற்றிகரமாக முறியடித்துள்ளது.
வடக்கு காஷ்மீரின் தங்தார் செக்டாரில் ஆயுதங்கள் குறித்த தகவல் கிடைத்த போது இராணுவ வீரர்கள் திங்கள் மாலை 6.30 மணிக்கு தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.
இந்த தேடுதல் வேட்டையின் போது வீரர்கள் ஐந்து கைத்துப்பாக்கிகள்,பத்து மேகசின்கள் மற்றும் 138 ரவுண்டு குண்டுகள் கொண்ட பேக் ஒன்றை கைப்பற்றினர்.
இதே போல சில நாட்களுக்கு முன் கேரன் செக்டாரில் எல்லைக் கட்டுப்பாட்டு கோடுக்கு அருகே இரு-மூன்று பேர் நடமாடுவதை கண்ட வீரர்கள் உடனடியாக அங்கு சென்றனர்.
அங்கு சென்று தேடுதல் வேட்டையில் ஈடுபட்ட வீரர்கள்
நான்கு AK 74 துப்பாக்கிகள்,எட்டு மேகசின்கள் மற்றும் 240 ஏகே குண்டுகள் அடங்கிய இரு பைகளை கைப்பற்றினர்.