பாகிஸ்தான் கடற்படையை நவீனப்படுத்தும் திட்டத்தின் கீழ் 20 பெரிய போர்க்கப்பல்கள் உட்பட 50 போர்கப்பல்களை படையில் இணைக்க உள்ளதாக தற்போது ஓய்வு பெற உள்ள பாக் கடற்படை தளபதி அட்மிரல் ஜபார் மம்மூத் அப்பாசி கூறியுள்ளார்.
சீனத் தயாரிப்பு நான்கு பிரைகேட் கப்பல்களை அடுத்த சில வருடங்களிலும் நடுத்தர ரக துருக்கிய தயாரிப்பு கப்பல்களை 2023-25 ஆண்டுகள் வாக்கில் இணைக்க உள்ளதாக அவர் கூறியுள்ளார்.
மேலும் சீன உதவியுடன் எட்டு நீர்மூழ்கிகள் கட்டப்படும் எனவும் நான்கு சீனாவிலும் நான்கு பாகிஸ்தானிலும் கட்டப்படும் என கூறியுள்ளார்.