
“புல்வாமாவில் நமது வெற்றி , பிரதமர் இன்ரான் கான் தலைமையில் நாட்டின் வெற்றி ” என பாக்கின் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப துறை அமைச்சர் பவத் சௌதாரி அந்நாட்டின் நேசனல் அசம்ளியில் கூறியுள்ளார்.
“நாங்கள் இந்தியாவை அவர்கள் வீட்டில் வைத்தே தாக்கியுள்ளோம் ” என அவர் கூறியுள்ளார்.இந்த சம்பவத்தால் கிட்டத்தட்ட இருநாடுகளும் போரிடும் நிலைக்கு சென்றுவிட்டன.இதன் மூலம் பாக் பயங்கரவாதத்திற்கு ஆதரவளிப்பதை நாம் உறுதி செய்யலாம்.
அபிநந்தனை விடுவிக்காவிட்டால் இந்தியா இரவு தாக்கும் என இதற்கு முன் பாக்கின் முஸ்லிம் லீக் தலைவர் ஆயஷ் சித்திக் ஒரு தகவலை வெளியிட்டிருந்தார்.இதை கேட்டதும் பாக் இராணுவ தளபதி பயத்தில் நடுங்கினார் என்ற தகவலும் வெளியானது.தற்போது இந்த புதிய தகவலும் வெளியாகியுள்ளது.புல்வாமா தாக்குதலில் தங்களது பங்கு உள்ளதை பாக் தற்போது ஒப்புக்கொண்டுள்ளது.