மலைப்பகுதி போர்முறைக்கு சீனாவுக்கு உதவுகிறதா பாக் இராணுவம்?

  • Tamil Defense
  • October 4, 2020
  • Comments Off on மலைப்பகுதி போர்முறைக்கு சீனாவுக்கு உதவுகிறதா பாக் இராணுவம்?

சீன செய்தியாளர் ஒருவர் டிவிட்டரில் ஒரு கானொளி ஒன்றை பகிர அது தற்போது வைரல் ஆகி வருகிறது.அதற்கு காரணம் அந்த கானொளியில் சீன இராணுவ வீரர்களோடு ஒரு தாடி வைத்த சீன முகமற்ற ஒருவர் தோன்றுகிறார்.சீனர்களுக்கான உடல் அமைப்பும் இல்லை.இதை கண்ட நெட்டிசன்கள் பாக் இராணுவம் சீன இராணுவத்திற்கு மலைப் பகுதி போர்முறையிலா உதவுவதாக கூறிவருகின்றனர்.

கடந்த ஜீனில் ஒரு சீன இராணுவ வல்லுநர் இந்திய வீரர்கள் மலைப்பகுதி போர்முறையில் சிறந்தவர்கள் என கூறினார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்தியாவின் பெரிய அனுபவம் வாய்ந்த மலையக போர் பிரிவு உள்ளது.

இதன் காரணமாக சீனா பாக்கை உதவிக்கு அழைத்திருக்கலாம் என்ற தகவல் வெளியாகியுள்ளது.