சீன உதவியுடன் ஏவுகணை தளங்களை அமைக்கும் பாகிஸ்தான்; அதிர்ச்சி ரிப்போர்ட்

  • Tamil Defense
  • October 7, 2020
  • Comments Off on சீன உதவியுடன் ஏவுகணை தளங்களை அமைக்கும் பாகிஸ்தான்; அதிர்ச்சி ரிப்போர்ட்

லடாக் பகுதியில் இந்தியா-சீன எல்லை மோதல் நடைபெற்று வரும் நிலையில் பாகிஸ்தான் சீன உதவியுடன் பாக் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் ஏவுகணை தளங்களை அமைத்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

கடந்த ஐந்து மாதமாக இந்தியாவும் சீனாவும் எல்லையில் மோதலில் ஈடுபட்டு வருகின்றன.அமைதியை கொண்டு வர பல கட்ட பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட்டும் இன்னும் ஒரு முடிவு கூட எட்டப்படவில்லை.

தரையில் இருந்து ஏவப்பட்டு தரை இலக்குகளை தாக்கும் ஏவுகணைகளுக்கான தளம் சீன இராணுவம் மற்றும் பாக் இராணுவம் இணைந்து பாக் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் கட்டி வருகின்றன.

இதே போல கட்டுமானம் பாக் ஆக்கிரமிப்பு காஷ்மீரின் ஹட்டியன் பாலா மாவட்டத்தில் சினார் மற்றும் சக்கோதி கிராமத்தில் கண்டறியப்பட்டுள்ளன.

இரு முனை போரை எதிர்கொள்ள விமானப்படை தகுந்த நிலையில் இருப்பதாக ஏற்கனவே இந்திய விமானப்படை தளபதி கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.