காஷ்மீரில் தொடர்ச்சியாக சரணடையும் பயங்கரவாதிகள்
1 min read

காஷ்மீரில் தொடர்ச்சியாக சரணடையும் பயங்கரவாதிகள்

காஷ்மீரில் என்கௌன்டர் தொடங்கினால் பயங்கரவாதிகளை இராணுவ வீரர்கள் சுற்றி வளைத்து அவர்களை தப்பிக்கவிடாமல் தாக்குவது வழக்கம் ஆகும்.ஆனால் அப்படி செய்யும் தருணத்தில் நமது வீரர்கள் பயங்கரவாதிகள் சரணடைய ஒரு வாய்ப்பு தருவார்கள்.

முதலில் வீரர்கள் மெகாபோன்களில் பயங்கரவாதிகளை சரணடைய வலியுறுத்துவர்.அதன் பிறகு அந்த குறிப்பிட்ட பயங்கரவாதியை அடையாளம் கண்டுகொண்டால் அவனது தாய் அல்லது தந்தையை வரவழைத்து சரணடைய வலியுறுத்துவர்.

மறுக்கும் பட்சத்தில் அவனது விதி உறுதி செய்யப்படும்.ஆனால் சமீபத்தில் பயங்கரவாதிகள் என்கௌன்டரின் போது சரணடைந்து வருகின்றனர்.

சில நாட்களுக்கு முன்பு ஒரு பயங்கரவாதி சரணடையும் கானொளி வைரல் ஆகியது குறிப்பிடத்தக்கது.

அதே போல நேற்று நடைபெற்று வந்த என்கௌன்டரிலும் ஒரு பயங்கரவாதி சரணடைந்துள்ளான்.

ஆபரேசன் நூர்புரா எனும் பெயரில் புல்வாமாவில் நடைபெற்று வந்த என்கௌன்டரில் ஒரு பயங்கரவாதி வீழ்த்தப்பட்டான்.ஆனால் இரண்டாவது பயங்கரவாதி வீரர்களின் கோரிக்கையை ஏற்று சரணடைந்துள்ளான்.

ஒரு ஏகே ரக துப்பாக்கி கைப்பற்றப்பட்டுள்ளது.