பூஞ்சில் பாக் படைகள் தாக்குதல் ஒரு வீரர் வீரமரணம் ஒரு வீரர் காயம்

நேற்று இரவு பாக் படைகள் பூஞ்ச் செக்டார் பகுதியில் நடத்திய தாக்குதலில் ஒரு இராணுவ வீரர் வீரமரணம் அடைந்துள்ளார்.மேலும் ஒரு வீரர் காயமடைந்துள்ளார்.

கர்நாய்ல் சிங் என்ற இராணுவ வீரர் வீரமரணம் அடைந்துள்ளார்.மேலும் ரைபிள்மேன் வீரேந்தர் சிங் என்ற வீரர் படுகாயமடைந்துள்ளார்.

மன்கோட் செக்டாரிலும் பாக் படைகள் கடுமையான தாக்குதலை நடத்தியுள்ளன.இந்த தாக்குதலுக்கு இந்திய இராணுவம் சார்பில் கடுமையான பதிலடி கொடுக்கப்பட்டது.