வடகொரியாவின் கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணை

  • Tamil Defense
  • October 11, 2020
  • Comments Off on வடகொரியாவின் கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணை

வடகொரியாவின் ஆளும் ஒரே கட்சியான Workers’ Party of Korea தொடங்கப்பட்டதின் 75வது தினத்தை முன்னிட்டு பியாங்கோங்கில் இராணுவ அணிவகுப்பு நடைபெற்றது.இந்த அணிவகுப்பில் கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணை இடம்பெற்றுள்ளது.

வடகொரிய தலைவர் கிம் ஜோங் உன் பெரிய கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணையை வெளியிட்டார்.இது உலக நாடுகளின் கவனத்தை ஈர்த்துள்ளது.

விழாவை முன்னிட்டு பேசிய கிம் அவர்கள் நாங்கள் தொடர்ந்து எங்களது பாதுகாப்பிற்காக இராணுவ வலிமையை அதிகரிப்போம் என பேசியுள்ளார்.மேலும் எங்கள் நாட்டில் ஒருவர் கூட கொரானாவால் பாதிக்கப்படவில்லை எனவும் கூறியுள்ளார்.