
சுமார் 409 கோடிகள் செலவில் இந்திய இராணுவதிற்கு புதிய கிரேனேடுகள் வாங்கப்பட உள்ளன.இவற்றை இந்திய தனியார் நிறுவனமான சோலர் குரூப் நிறுவனம் வழங்கும்.
டிஆர்டிஓ வடிவமைத்த புதிய தலைமுறை கிரேனேடுகள் தற்போது இராணுவத்தில் உள்ள பழைய இரண்டாம் உலகப் போர் காலத்து கிரேனேடுகளுக்கு மாற்றாக பயன்படுத்தபடும்.
இந்த மல்டி மோடு கையால் வீசக்கூடிய கிரேனேடு நமது டிஆர்டிஓ வின் பலிஸ்டிக் ஆராய்ச்சி ஆய்வகத்தில் வடிவமைக்கப்பட்டது ஆகும்.