நாக் ஏவுகணை படையில் இணையத் தயார்-சோதனை வெற்றி

  • Tamil Defense
  • October 22, 2020
  • Comments Off on நாக் ஏவுகணை படையில் இணையத் தயார்-சோதனை வெற்றி

இந்திய இராணுவத்திற்காக டிஆர்டிஓ மேம்படுத்தியுள்ள டேங்க் எதிர்ப்பு ஏவுகணையான நாக் இன்று வெற்றிகரமாக சோதனை செய்யப்பட்டுள்ளது.இந்த ஏவுகணை தற்போது படையில் இணைக்கப்பட உள்ளது.

பொக்ரான் சோதனை தளத்தில் காலை 6.45க்கு இந்த ஏவுகணை ஏவி பரிசோதனை செய்யப்பட்டது.உண்மையான வெடிபொருளை ஏவுகணை முனையில் இணைத்து ஒரு டேங்கை இலக்காக வைத்து பரிசோதனை செய்யப்பட்டதில் இலக்கை ஏவுகணை மிகச் சரியாக தாக்கியது.

இந்த ஏவுகணை இரவு மற்றும் பகலில் செயல்பட வல்லது.எதிரி கவச வாகனங்கள் மற்றும் பங்கர்களை இதன் மூலம் தாக்கியழிக்க முடியும்.

இந்த ஏவுகணையை இந்தியாவின் பாரத் டைனமிக் நிறுவனம் தயாரிக்கும்.இதனை ஏந்தி செல்லும் நமிகா வாகனத்தை OFB மேடக் தயாரிக்கும்.