
எல்லையில் கல்வான் எனும் பகுதியில் நடைபெற்ற சண்டையில் வீரமரணம் அடைந்த 20 இந்திய வீரர்களுக்கான நினைவகம் நான்கு மாதங்களுக்கு பிறகு தற்போது அமைக்கப்பட்டுள்ளது.
சீன வீரர்களுடனான மோதலில் வீரமரணம் அடைந்த 20 இந்திய வீரர்களுக்காக இந்த நினைவகம் தற்போது அமைக்கப்பட்டுள்ளது.
கல்வான் பகுதியில் சீனா அமைத்திருந்த கண்காணிப்பு நிலையை அகற்ற இந்திய வீரர்கள் முயன்ற போது இந்த சண்டை ஏற்பட்டது.
டர்புக்-ஸ்யோக்-தௌலத் பெக் ஓல்டி சாலைக்கு அருகே உள்ள கேஎம்-120 நிலைக்கு அருகே இந்த நினைவகம் ஏற்படுத்தப்பட்டுள்ளது.