கமோர்ட்டா வகை நீர்மூழ்கி எதிர்ப்பு போர்க்கப்பல்கள்

  • Tamil Defense
  • October 24, 2020
  • Comments Off on கமோர்ட்டா வகை நீர்மூழ்கி எதிர்ப்பு போர்க்கப்பல்கள்

இந்தியக் கடற்படையின் மிக ஆபத்தான நீர்மூழ்கி எதிர்ப்பு கப்பல் பற்றி இந்த பதிவில் காணலாம்.

முன்னுரை

நீர்மூழ்கி எதிர்ப்பு கப்பல்கள் ஒரு நவீன கடற்படையில் இன்றியமையாத ஒன்றாகும்.வெளியில் அதிகம் கவனிக்கப்படாத ஒரு கப்பல் வகையாகவும் இது உள்ளது.பல கடற்படைகளில் இது போன்றதொரு வகை கப்பல்கள் இல்லாமல் உள்ளது.இதற்காக அந்த கடற்படைகள் வேறு பெரிய வகை கப்பல்களை நம்பி உள்ளனர்.ஆனால் வளர்ந்து வரும் நீர்மூழ்கி அச்சுறுத்தல்களுக்கு இது போன்ற கப்பல் வகை எல்லா நாட்டு கடற்படைக்கும் தேவையாக உள்ளது.உலகம் முழுவதிலும் உள்ள முக்கிய கடற்படைகள் தங்களுக்கென பிரத்யேக போர் முறைகளை வகுத்துள்ளன.அதில் இந்த நீர்மூழ்கி எதிர்ப்பு போர்முறைக்கும் அவர்களுக்கேற்ற தந்திரங்களை கையாள்வர்.அமெரிக்க கடற்படையில் இதற்காக கரையோர தாக்கும் கப்பல்கள் (Littoral Combat Ship)உள்ளன.இங்கிலாந்தோ பெரிய நீர்மூழ்கி எதிர்ப்பு பிரைகேட் கப்பலை நம்பியுள்ளது.இரஷ்யாவும் இந்தியாவும் நீர்மூழ்கி எதிர்ப்பு கார்வெட் ரக கப்பல்களை இந்த நீர்மூழ்கி எதிர்ப்பு போர்முறைக்கு பயன்படுத்துகிறது.

அந்த வகையில் நாம் நமது நீர்மூழ்கி எதிர்ப்பு கார்வெட் கப்பலான கமோர்த்தா வகை கப்பல்களை குறித்து காணலாம்.

தோற்றம்

1968 முதல் இந்தியா தனது கடற்படையில் நீர்மூழ்கி எதிர்ப்பு கார்வெட் கப்பல்களை இணைத்து வருகிறது.1968 முதல் 1972 வரை இந்தியா 11 பெட்யா வகை பிரைகேட் கப்பலை பெற்று அவற்றை அர்னாலா வகை கார்வெட் கப்பலாக மாற்றி படையில் இணைத்தது.இந்த 1150டன் கப்பல்கள் வேகமாகவும்,நீர்மூழ்கி எதிர்ப்பு நடவடிக்கையில் திறமையானதாகவும் இருந்தன.ஆனால் அவற்றிற்கு சில பிரச்சனையும் இருந்தன.

1)நீலக்கடலில் நடவடிக்கைகள் நடத்தும் அளவிற்கு நீண்ட தூரம் செல்ல தகுதியற்று இருந்தன.
2)அதன் உடலமைப்பு ( hulls) தரமானதாக இருக்கவில்லை.
3)நீர்மூழ்கி எதிர்ப்பு வானூர்தியை அதால் சுமக்க முடியாது.
4)கப்பலுக்கு சுயபாதுகாப்பு அறவே இல்லை.

எனவே இந்தக் கப்பல்களை கடற்படையின் ஏவுகணைக் கப்பலுக்கு பாதுகாப்பு வழங்க கடற்படை பயன்படுத்தி கொண்டது.முதலில் இந்தக் கப்பல்களின் செயல்பாடு நமது கடற்படைக்கு திருப்தி அளித்தது.ஏனெனில் தற்போது உள்ளது போன்று நமது கடற்படை அன்று இல்லை.ஆனால் இன்று நமது கடற்படை நெடுந்தூரம் சென்று நடவடிக்கைகள் நடத்துகிறது.நமது கடற்படையின் கொள்கை நீலக்கடல் கடற்படையாக மாறுவது தான்.நீலக்கடலெங்கும் தனது கரங்களை செயல்படுத்துவது.

எனவே இந்த அர்னாலா கப்பல்களை கொண்டு இது சாத்தியப்படாது என்று நினைத்த கடற்படை மேற்கூறிய குறைகள் அற்ற கப்பலை படையில் இணைக்க நினைத்தது.கரையோர ரோந்துக்கும் சரி, நீண்ட கடலில் பாதுகாப்பு நடவடிக்கைகளின் போதும் சரி , சிறப்பாக செயல்படுகிற ஒரு கப்பல் தற்போது நமது கடற்படைக்கு தேவையாக இருந்தது.இதற்கு கிடைத்த பதில் தான் கமோர்த்தா வகை கப்பலின் மேம்பாடு.கமோர்த்தா அர்னாலாவை விட எப்படி மேம்பட்டது?

1)அர்னாலாவை விட மூன்று மடங்கு எடை அதிகம் என்பதால் அதிக ஆயுதங்கள் மற்றும் சென்சார்கள்

2)ஒரு நீர்மூழ்கி எதிர்ப்பு வானூர்தியை நிறுத்த முடியும்.

3)அதிநவீன ரேடார்கள் மற்றும் சோனார்கள்

4)நீண்ட தூர நடவடிக்கைகளுக்கு ஏற்றது

5)அதிகம் சத்தமிடாத என்ஜின்கள் மற்றும் புரோபல்சன்கள் கொண்டது.

6)அதிக தரத்துடன் கட்டப்பட்டது.

வடிவம்

கமோர்த்தா கப்பலின் ஒரே பணி நீர்மூழ்கிகளை வேட்டையாடுவது தான். 3400 டன்கள் எடையும், a 109மீ நீளமும் கொண்டது.இந்த கமோர்த்தா கப்பல் 90% இந்திய தயாரிப்பு.இதில் பயன்படுத்தப்பட்ட ஸ்டீல் மற்றும் காம்போசிட்டுகள் இந்தியாவினுடையது.அதே போல பெரும்பாலான ஆயுதங்கள் மற்றும் சென்சார்கள் இந்தியத் தயாரிப்பே. கப்பலில்  4 Pielstick diesel engines generating 3888 kW each, which drive 2 controllable pitch propellers via the gearboxes உள்ளன.கப்பலில் 150 வீரர்களும் 15 அதிகாரிகளும் இருப்பர்.

1)கப்பலில் உடலமைப்பு X-form வடிவத்தில் சாய்வாக இருப்பதால் எதிரியின் ரேடாரில் கப்பல் குறைவாகவே சிக்கும்.

2)கிட்டத்தட்ட 18 நாட் வேகத்தில் 6500+ கிமீ வரை செல்லக்கூடியது.

4)Combined Diesel and Diesel (CODAD) propulsion உள்ளதால் இலகுவாக சத்தம் பெரிதாக வராது அளவுக்கு இருக்கும்.

எதிரி கப்பல் மற்றும் நீர்மூழ்கி கண்டுபிடிப்பதை கடினமாக்கும் பொருட்டு இவ்வாறு வடிவமைக்கப்பட்டுள்ளது.இது மிகவும் முக்கியமான ஒன்றாகும்.ஏனெனில் எதிரி உங்களை கண்டுபிடிக்கும் முன் நீங்கள் எதிரியை கண்டுபிடித்து அழிப்பது முக்கியமானது.

சென்சார்கள்

இந்தியர்கள் பெருமைப்படத்தக்க ஒரு விசயம் இந்தக் கப்பலில் உள்ளது.கப்பலின் முக்கிய முன்னனி ரேடாராக இந்தியா சொந்தமாக மேம்படுத்திய ரேவதி 3டி ரேடார் உள்ளது.இந்திய போர்க்கப்பல்களில் முன்னனி ரேடாராக இந்தியா மேம்படுத்திய ரேடார் இருப்பது இதுவே முதல் முறை.

ரேவதி ஒரு முப்பரிமாண ரேடார். S-band-ல் இயங்க கூடியது.இது பலபணி ரேடார் ஆகும்.இந்த ரேடாரால் கடலின் தரைப்பரப்பையும் கப்பலின் வான் பரப்பையும் கண்காணிக்க முடியும்.கிட்டத்தட்ட 200கிமீ வரை கண்காணிக்க முடியும்.இது Central Acquisition radar (CAR)ஆக வடிவமைக்கப்பட்டுள்ளது.ஆயுதங்களை கட்டுப்படுத்தி தாக்கும் fire control radar இலக்கை காணும் முன்னரே ரேவதி ரேடாரால் இலக்கை காண முடியும்.

அடுத்ததாக TMX EO Mk2 ரேடார் உள்ளது.X-bandல் இயங்கும் fire control radar ஆகும்.உடன் secondary electro-optical மற்றும் IR sensors for targeting உள்ளது.முன்னால் மற்றும் பின்பகுதி இரண்டு ரேடார்கள் பொருத்தப்பட்டுள்ளன.முன்பகுதியில் உள்ள ரேடார் 76 mm gun துப்பாக்கியை கட்டுப்படுத்தி இயக்கவும்,பின்பகுதியில் உள்ள ரேடார் Ak-630 துப்பாக்கிகளை கட்டுப்படுத்தி இயக்கவும் பயன்படுகிறது.

ஆயுதங்கள்

ஒரு நீர்மூழ்கியை எதிர்த்து அழிக்கவும்,தன்னை பாதுகாத்து கொள்ளவும் தேவையான ஆயுதங்களை கமோர்த்தா கொண்டுள்ளது.

1) ஒரு 76 mm Oto Melara Super Rapid Gun Mount (SRGM) உள்ளது.16கிமீ தொலைவுக்குள் வரும் கடற்தரைப் பகுதி மற்றும் வான்பகுதியில் வரும் இலக்குகளை துல்லியமாக தாக்க கூடியது.

2)இரு உள்நாட்டில் மேம்படுத்தப்பட்ட RBU-6000 ராக்கெட் லாஞ்சர்கள் உள்ளன.ஒவ்வொரு லாஞ்சரிலும் 12 குழல் உள்ளது. 4500மீ வரை வரும் இலக்குகளை நீருக்குள் தாக்க வல்லது.நீர்மூழ்கி கப்பலை நோக்கி வரும் போது இதை இயக்கினால் ராக்கெட் நீர்மூழ்கி அருகே சென்று வெடிக்கும்.அப்படி வெடிக்கும் போது அது நீர்மூழ்கியில் மேற்பகுதியை உடைத்து விடும்.அல்லது கப்பலை நோக்கி டர்பிடோ வந்தால் கூட அதனருகில் ராக்கெட் ஏவப்பட்டால் கூட டர்பிடோவை தடுத்துவிடும்.ஒரு முறை எதிரி நீர்மூழ்கி தென்பட்டால் பல வெடிமருந்துகள் பொருத்தப்பட்ட 24 ராக்கெட்டுகள் அதை நோக்கி ஏவப்படும்.இதனால் நீர்மூழ்கி அழிக்கப்படுவது உறுதி.

3) 533 mm torpedo குழல்கள் உள்ளது.இதிலிருந்து 20கிமீ வரை செல்லும் அதிக எடை கொண்ட டர்பிடோக்களை ஏவ முடியும்.

4)ஒரு வானூர்தி உள்ளது.மற்றும் எதிர்காலத் தேவைக்காக போதுமான இடம் கப்பலில் வெறுமனே விடப்பட்டுள்ளது.

சில வல்லுநர்கள் கமோர்த்தா வகை சரியாக ஆயுதம் தரிக்கப்படவில்லை என குற்றம் சாட்டுகின்றனர்.உண்மை தான்.ஆனால் அது நிரந்தரமில்லை.எதிர்கால தேவையை கணக்கில் கொண்டே தேவையான இடம் கப்பலில் விடப்பட்டுள்ளது.

பாக் மற்றும் சீன நீர்மூழ்கிகளை வேட்டையாட இந்தியா தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் எடுத்து வருகிறது.பி8ஐ விமானங்களில் இருந்து,நீர்மூழ்கி எதிர்ப்புக்காக நன்கு ஆயுதம் தரிக்கப்பட்ட கொல்கத்தா வகை வரை இதில் அடக்கம்.அதிலும் பிரத்யேகமாக இந்த கமோர்த்தா வகை கார்வெட்.

போர்க்காலங்களில் நீர்மூழ்கி வேட்டை.அப்போ அமைதிக் காலங்களில் என்ன பணி?

விமானம் தாங்கி கப்பல் பாதுகாப்பு

விமானம் தாங்கி கப்பல் பாதுகாப்புக்கு பயன்படுத்தலாம்.அதாவது கேரியர் பேட்டில் க்ருப்பில் இணைக்கப்பட்டு விமானம் தாங்கி கப்பலுக்கு பாதுகாப்பு தருவது.வி.தா.கப்பலுக்கு 50கிமீ முன்புறம் சென்று எதிரி நீர்மூழ்கியில் இருந்து மொத்த படைக்குழுவையும் காக்கலாம்.இதனுடன் பி8ஐ சேரும் போது மிகக் கச்சிதமாக செயல்பட முடியும்.

கரையோர பாதுகாப்பு

இதை பெரும்பாலும் கோரா மற்றும் மற்ற வகை ஏவுகணைக் கப்பல்கள் செய்கின்றன.ஆனால் அவற்றால் தங்களை நீர்மூழ்கியில் இருந்து பாதுகாத்து கொள்ள முடியாது.எனவே இவை கமோர்த்தா வகை கப்பலை தான் நம்பியுள்ளன.1971 இதே போன்ற ஒரு குழு தான் கராச்சியை தீக்கிரையாக்கியது.

Surface combatant Escort

கடற்படையின் பெரிய கப்பல்களான பிரைகேட் மற்றும் டெஸ்ட்ராயர்களுக்கு பாதுகாப்பு தருவது.

நீர்மூழ்கி அழிப்பு

ஒரு நீர்மூழ்கிய அழிக்க பெரிய 7000 டன் கப்பலை அனுப்புவதை விட இந்த சிறிய கப்பல் அதே வேளையை செய்யக்கூடியது.நீர்மூழ்கியை விரட்டுவதாயினும் சரி அழிப்பதும் சரி எளிதான காரியம் தான்.மேலும் பி8ஐ உடன் இணைந்து செயல்படும் போது வெற்றி உறுதியான ஒன்றாக உள்ளது.

முடிவுரை

கண்டிப்பாக கமோர்த்தா வகை கப்பல்கள் எதிர்காலத்திற்கானது.இன்னும் வரும் பல காலத்திற்கு இவை முக்கிய முன்னனி போர்க்கப்பல்களாக செயல்பட உள்ளது.தற்போது நான்கு கப்பல்கள் படையில் இணைக்கச் செய்யப்பட்டுள்ளது.எதிர்காலத்தில் மேலும் 8 கப்பல் ஆர்டர் செய்யப்படலாம்.இந்திய எல்லை மற்றும் சர்வதேச பகுதிகளில் ரோந்து செய்ய கடற்படைக்கு மிகவும் உதவக்கூடிய ஒன்றாக இருக்கும்.வர்த்தக கப்பல்களுக்கு பாதுகாப்பாக இருக்கும்.இது கண்டிப்பாக சீனா மற்றும் பாகிஸ்தானுக்கு பெரிய தலைவலியாக இருக்கும் என்பதில் எந்த எதிர் கருத்தும் இல்லை.