முக்கிய ஆயுதங்கள் இல்லாமல் படையில் இணைந்துள்ள கவரத்தி போர்க்கப்பல்

  • Tamil Defense
  • October 27, 2020
  • Comments Off on முக்கிய ஆயுதங்கள் இல்லாமல் படையில் இணைந்துள்ள கவரத்தி போர்க்கப்பல்

கடந்த அக்டோபர் 23 அன்று விசாகப்பட்டிணத்தில் நடைபெற்ற விழாவில் நான்காவதும் கடைசி கமோர்த்தா ரக கப்பலான ஐஎன்எஸ் கவரத்தி கடற்படையில் இணைக்கப்பட்டது.இதை இந்திய இராணுவ தளபதி படையில் இணைத்தார்.

3400 டன்கள் எடையுடைய நீர்மூழ்கி எதிர்ப்பு கார்வெட் கப்பலான இது இந்தியாவின் கார்டன் ரீச் கப்பல் கட்டும் தளம் கட்டியது.இந்த கப்பல் 90% இந்திய தயாரிப்பு ஆகும்.அதனுடைய என்ஜின் மற்றும் ஆயுங்கள்,சென்சார்கள் இந்திய தயாரிப்பு ஆகும்.

ஆனால் பிரச்சனை என்னவென்றால் நான்கு கப்பல்களுமே முழுமையாக ஆயுதம் தரித்திருக்கவில்லை அதனால் நான்கு கப்பல்களும் முழுவதும் தனது செயல்பாட்டை தொடங்க இன்னும் சில காலங்கள் ஆகலாம்.அனைத்து கப்பல்களும் 2014 முதல் 2020 வரையிலான காலகட்டத்தில் படையில் இணைக்கப்பட்டது.

இரு முக்கிய ஆயுதங்கள் இல்லாமல் இந்த கப்பல்கள் படையில் இணைக்கப்பட்டுள்ளன.ஒன்று
towed array sonar மற்றொன்று வான் பாதுகாப்பு ஏவுகணைகள்.இழுவை சோனார்கள் என்பவை கப்பலுக்கு பின்னால் கட்டி இழுக்கப்படும் சோனார்கள் ஆகும்.கப்பலின் புரோபலர்கள் சத்தத்திற்கு அப்பால் இவை இழுக்கப்பட்டு எதிரி நீர்மூழ்கிகளின் நடமாட்டத்தை கண்காணிக்கும்.நீர்மூழ்கி எதிர்ப்பு போர்முறையில் இது மிக முக்கிய ஆயுதம் ஆகும்.

அதன் பிறகு கப்பலின் சுய பாதுகாப்பிற்கான வான் பாதுகாப்பு ஏவுகணைகள்.இவைகள் இல்லாமல் கப்பலை இயக்குவது மிக ஆபத்தானது ஆகும்.எதிரியின் கப்பல் எதிர்ப்பு ஏவுகணைகள், போர் விமானங்கள் மற்றும் வானூர்திகளில் இருந்து இந்த வான் பாதுகாப்பு ஏவுகணைகள் தான் போர்க்கப்பலை பாதுகாக்கும்.

தற்போது இரு ஏகே-630 துப்பாக்கிகள் மட்டும் தான் உள்ளன.இவை நான்கு கிமீ மட்டுமே சுட முடியும்.தற்போது இந்த கமோர்த்தா கப்பல்களை இயக்க வேண்டுமென்றால் மற்ற போர்க்கப்பல்களின் வான் பாதுகாப்பு வளையத்திற்குள் இருந்தே செயல்பட முடியும்.

நமது டிஆர்டிஓ நவீன இழுவை சோனார்களை இன்னும் மேம்படுத்தி வருவதால் இந்திய கடற்படை ஜெர்மனியின் அட்லாஸ் எலக்ட்ரானிக் நிறுவனத்திடம் இருந்து சுமார் 465 கோடிகள் செலவில் ஒன்பது Active Towed Array Sonar-களை பெற முடிவு செய்துள்ளது.இதற்கான ஒப்பந்தம் விரைவில் கையெழுத்தாக உள்ளது.

மேலும் கப்பலுக்காக புது குறைதூர வான் பாதுகாப்பு ஏவுகணை வழங்க ரஷ்யா,இஸ்ரேல் மற்றும் பிரான்ஸ் முன்வந்துள்ளன.இவர்களின் ஒருவர் தேர்ந்தெடுக்கப்பட்டு அவரிடம் இருந்து வான் பாதுகாப்பு ஏவுகணைகள் பெறப்படும்.பெறப்படும் இந்த புதிய ஏவுகணை விக்ரமாதித்யா கப்பலிலும் பொருத்தப்படும் என தகவல்கள் வெளியாகியுள்ளது.