ரிலையன்ஸ் நேவல் மற்றும் என்ஜினியரிங் நிறுவனத்திற்கு வழங்கிய 2500 கோடி அளவிலான கடலோர ரோந்து கப்பல் கட்டும் ஒப்பந்தத்தை ரத்து செய்துள்ளது கடற்படை.கப்பல் கட்டுவதில் ஏற்பட்ட கால தாமதத்தால் தான் இந்த ஒப்பந்தம் ரத்து செய்யப்பட்டுள்ளது.
ஐந்து கப்பலை கட்ட கடந்த 2011ம் ஆண்டு ஒப்பந்தம் வழங்கியது இந்திய கடற்படை.இரண்டு வாரத்திற்கு முன்பு இந்த ஒப்பந்தம் ரத்து செய்யப்பட்டுள்ளது.
ஒப்பந்தம் ரத்து செய்யப்பட்டது குறித்து எந்த கருத்தும் இதுவரை ரிலையன்ஸ் நிறுவனம் வெளியிடவில்லை.