
பாக் ட்ரோன்கள் உதவியுடன் இந்திய எல்லைக்குள் ஆயுதங்களை கடத்தவும் ,பயங்கரவாதிகள் ட்ரோன்கள் உதவியுடன் வீரர்களின் மீது கிரேனேடு வீசி தாக்குதல் நடத்த வாய்ப்புகள் உள்ளதால் இந்திய வீரர்கள் புதிய ரக பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.
திடீரென தோன்றும் ட்ரோன்களில் இருந்து தங்களை வீரர்கள் பாதுகாப்பது எப்படி என்பது குறித்து 15 கார்ப்ஸ் பேட்டில் ஸ்கூலில் வீரர்களுக்கு பயிற்சி வழங்கப்படுகிறது.
காஷ்மீருக்கு பணிக்கு வரும் வீரர்களுக்கு இந்த பயிற்சி பள்ளியில் பயிற்சி வழங்கப்படும்.தற்போது இந்த புதிய பயிற்சியும் வழங்கப்படுகிறது.
பாக் எல்லைக்கு செல்லும் வீரர்களுக்கு ஒரு பயிற்சி மற்றும் காஷ்மீருக்குள் பயங்கரவாத தடுப்பு நடவடிக்கைகளில் ஈடுபடும் வீரர்களுக்கு மற்றொரு பயிற்சி என இரு வகை பயிற்சிகள் அங்கு வழங்கப்படுகின்றன.
எல்லைக்கு செல்லும் வீரர்கள் 14 நாட்களும் ,பயங்கரவாத தடுப்பு நடவடிக்கைகளில் ஈடுபடும் வீரர்கள் 28 நாட்களும் பயிற்சியில் ஈடுபடுவர்.