கிழக்கு லடாக் பகுதியில் கடந்த திங்கள் அன்று தெம்சோக் செக்டார் பகுதியில் இந்திய எல்லைக்குள் நுழைந்த சீன இராணுவ வீரர் ஒருவரை இந்திய இராணுவ வீரர்கள் கைது செய்தனர்.
கார்போரல் வாங் யு லோங் என்று அடையாளம் காணப்பட்ட அவர் உளவு பார்க்க வந்தாரா என்ற கோணத்தில் அவரிடம் விசாரணை நடத்தப்பட்டு தற்போது அவர் விடுவிக்கப்பட்டுள்ளார்.
அனைத்து செயல்முறைகளும் முடிந்த பிறகு இந்திய சீன இராணுவ பேச்சுவார்த்தை சந்திப்பு எல்லையான சூசுல்-மோல்டோ எல்லையில் சீன இராணுவத்திடம் அவர் பத்திரமாக ஒப்படைக்கப்பட்டுள்ளார்.