
ஜம்மு காஷ்மீரின் ராஜோரி மாவட்டத்தில் நௌசேரா செக்டாரில் பாக் படைகள் அத்துமீறி துப்பாக்கி சூடு நடத்தின.இந்த தாக்குதலில் இந்திய இராணுவத்தின் ஜேசிஓ வீரமரணம் அடைந்துள்ளார்.
திங்கள் மாலை 6.30 மணிக்கு எல்லைக்கட்டுப்பாடு கோடு அருகே உள்ள பாபா கோரி,கல்சியான் ஆகிய இடங்களை குறிவைத்து பாக் படைகள் கடும் தாக்குதல் நடத்தின.
இராணுவ நிலைகள் தவிர பொதுமக்கள் வசிக்கும் பகுதிகளை குறிவைத்தும் பாக் படைகள் தாக்குதல் நடத்தின.
இதற்கு இந்திய இராணுவம் கடும் பதிலடி வழங்கி வருகிறது.