2022க்குள் இந்திய இராணுவம் ஐந்து தியேட்டர் கமாண்ட்களாக மறுகட்டுமானம் செய்யப்பட உள்ளது.சீரான கட்டளை வரிசையுடன் ஒவ்வொரு தியேட்டருக்கும் தனியாக பணியாக இந்த கமாண்ட்கள் உருவாக்கப்படும்.
இதில் சீனாவுக்கென்றே தனியான வடக்கு தியேட்டர் கமாண்ட் மற்றும் பாக்கிற்கென்றே தனியான கிழக்கு தியேட்டர் கமாண்டும் அடக்கம் ஆகும்.சீனா மற்றும் அமெரிக்க இராணுவத்தில் உள்ளது போன்றே இந்த தியேட்டர் கமாண்டர் உருவாக்கப்படும்.
இந்த வடக்கு தியேட்டர் கமாண்ட் லடாக்கின் காரகோரம் பாஸ் முதல் அருணாச்சலின் கிபிது நிலை வரை பாதுகாக்கும்.இதன் தலைமையகம் லக்னோவில் அமையலாம் என தகவல் வெளியாகியுள்ளது.
அதே போல மேற்கு கமாண்ட் சியாச்சினில் உள்ள சால்டாரோ முகடு முதல் குஜராத் வரை பாதுகாக்கும்.இதன் தலைமையகம் ஜெய்பூரில் அமைய வாய்ப்புள்ளது.
மூன்றாவது கமாண்ட் தீபகற்ப கமாண்ட் ஆகவும் ,நான்காவது கமாண்ட் முழு வான் பாதுகாப்பு கமாண்ட் ஆகவும், ஐந்தாவது கமாண்ட் கடற்சார் கமாண்ட் ஆகவும் இருக்கும் என தகவல்கள் வெளியாகியுள்ளது.இதன் தலைமையகம் திருவனந்தபுரத்தில் அமையலாம் என்ற தகவல் வெளியாகியுள்ளது.
வான் பாதுகாப்பு கட்டளையகத்தின் பணி வான் பகுதியை பாதுகாப்பது மட்டுமே அல்லாமல் போர்விமானங்களை கொண்டு இந்திய வான் பகுதிகளை பாதுகாப்பதும் ஆகும்.அனைத்து விமான எதிர்ப்பு ஏவுகணைகளும் இதன் கட்டுப்பாட்டில் இருக்கும்.
தற்போது முப்படைகளும் தனித்தனியாகவே தான் இந்தியாவை காக்கின்றன.இணைந்த முழுமையான செயல்பாடு என்று ஏதும் இல்லை.
தியேட்டர் கமாண்டில் இராணுவ,விமானப்படை மற்றும் கடற்படை யூனிட்கள் ஒரே தியேட்டர் கமாண்டரின் கீழ் வரும் எனும் போது முப்படைகளும் இணைந்து செயல்பட இது வழிவகுக்கும்.
இந்த தியேட்டர் கமாண்டகளின் கட்டளை அதிகாரி லெப் ஜெனரல் தரத்தில் இருப்பார்.