போரை இணைந்து சந்திக்க தயாராகும் இராணுவம் மற்றும் விமானப்படை

  • Tamil Defense
  • October 5, 2020
  • Comments Off on போரை இணைந்து சந்திக்க தயாராகும் இராணுவம் மற்றும் விமானப்படை

இந்திய-சீன மோதல் தற்போது ஆறாவது மாதமாக தொடரும் நிலையில் வர உள்ள அனைத்தையும் இந்திய இராணுவம் மற்றும் விமானப்படை இணைந்து எதிர்கொள்ள தயாராக உள்ளன.

சீன எல்லையில் முன்னனி நிலைகளில் உள்ள வீரர்களுக்காக ரேசன் மற்றும் இதர பொருள்களுடன் தொடர்ந்து விமானப்படையின் போர்குதிரைகளான சி-17,ஐஎல்-76,சி-130ஜே ஆகியவை லேக்கு கொண்டு சென்ற வண்ணம் உள்ளன.

இராணுவத்தின் எந்த தேவையையும் உடனடியாக தீர்த்து இராணுவத்திற்கு பக்க பலமாக இருக்க விமானப்படை தலைமை தனது வீரர்களுக்கு அறிவுறுத்தியுள்ளது.

தற்போதுள்ள இராணுவ தளபதி முகுந்த் மற்றும் விமானப்படை தளபதி பதாரியா ஆகிய இருவரும் என்டிஏ-வில் ஒன்றாக படித்தவர்கள் ஆவர்.

எல்லையில் முன்னனி பகுதியில் உள்ள வீரர்கள் தங்கள் இருப்பு நிலையை அடிக்கடி விமானப்படைக்கு தெரிவித்து வருகின்றனர்.சீனா சண்டை இடும் பட்சத்தில் விமானப்படையுடன் இணைந்து அவர்களை எதிர்ப்பதற்கான சாத்தியக்கூறுகளையும் ஆராய்ந்து வருகின்றனர்.

இந்திய இராணுவம் சீனா மட்டுமல்ல பாகிஸ்தானுடனான ஒரு சண்டைக்கும் கூட லடாக் பகுதியில் தயாராகி வருகிறது.அங்கு முன்னனி பகுதியில் உள்ள வீரர்களுக்கு சின்னூக் வானூர்தி தொடர்ந்தள சப்ளைகள் வழங்கி வருகிறது.

சின்னூக் மற்றும் அப்பாச்சி வானூர்திகள் சீனாவுடனான சண்டையில் முக்கிய பங்கு வகிக்கிறது.