இருமுனை போரை எதிர்கொள்ள தயாராக உள்ளோம்: விமானப்படை

  • Tamil Defense
  • October 5, 2020
  • Comments Off on இருமுனை போரை எதிர்கொள்ள தயாராக உள்ளோம்: விமானப்படை

சீனாவுடனான மோதல் நடைபெற்று வரும் வேளையில் எல்லையில் எந்த முனையில் இருந்தும் வரும் ஆபத்துக்களை எதிர்கொள்ள தயார் நிலையில் உள்ளதாக கூறியுள்ளார்.

பேச்சுவார்த்தைகளை பொறுத்து தான் இது அமையும்.தற்போது எல்லையில் இருந்து படைகளை பின்வாங்கச்செய்யும் நோக்கில் பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது என விமானப்படை தளபதி பதாரியா கூறியுள்ளார்.

அடுத்த மூன்று மாதங்கள் எவ்வாறு இருக்கும் என கேட்கப்பட்ட கேள்விக்கு பதிலளித்த அவர் அடுத்த மூன்று மாதங்களுக்கு குளிர் இருக்கும்.அவற்றை எதிர்கொள்ள படைகள் தயார் நிலையில் உள்ளன.அதற்கு பின் களநிலவரங்களை பொறுத்தே செயல்பாடு அமையும் என கூறியுள்ளார்.

நம்மை எதிர்க்க சீனா பாக்கை பயன்படுத்த நினைத்தால் அதன் பின் நான் கூற ஏதும் இல்லை.சீனா பாக்கின் ஸ்கர்டு தளத்தை பயன்படுத்தினால் அது பெரிய ஆபத்து ஆகும்.நாம் அதற்கேற்ப செயல்படுவோம் என கூறியுள்ளார்.

சீனா நாம் வான் பலத்தை மிஞ்ச முடியாது.இந்தியா இருமுனை போரை எதிர்கொள்ள தயாராக உள்ளது எனவும் கூறியுள்ளார்.

எதிரியை எதிர்க்கும் அளவிற்கு மிக பலத்துடன் படைகள் தயார் நிலையில் உள்ளதாக கூறியுள்ளார்.தற்போது விமானப்படை தனது அனைத்து விதமாக போர்விமானங்களையும் எல்லைக்கு நகர்த்தி உள்ளது.

ரபேல் விமானங்களும் லடாக்கில் தற்போது ரோந்து பணிகளில் ஈடுபட்டு வருகின்றன.

வரும் அக்டோபர் 8ல் இந்திய விமானப்படை தினம் சிறப்பாக கொண்டாடப்பட உள்ளது.அக்டோபர் 12 அன்று எல்லைப்பிரச்சனை தொடர்பாக இந்தியா சீனா பேச்சுவார்த்தை நடைபெற உள்ளது.