மேலதிக ரபேல் அல்லது புதிய விமானங்கள் ? விமானப்படை சூசகம்

  • Tamil Defense
  • October 5, 2020
  • Comments Off on மேலதிக ரபேல் அல்லது புதிய விமானங்கள் ? விமானப்படை சூசகம்

மேலதிக இரு ஸ்குவாட்ரான்கள் ரபேல் விமானங்கள் வாங்குவது குறித்து பரிசீலனை செய்யப்பட்டு வருவதாக விமானப்படை தளபதி பதாரியா அவர்கள் முதல் முறையாக கூறியுள்ளார்.

ஆனால் தற்போது புதிய 83 தேஜஸ் மார்க்1ஏ விமானங்களுக்கான ஆர்டர் விரைவில் வெளியாகும் என விமானப்படை தெளிவாக கூறியுள்ளது.அதன் பிறகு பலபணி போர்விமானங்கள் மேக் இன் இந்தியா திட்டத்தில் வாங்கப்பட உள்ளது.அதன் பிறகு இந்தியாவின் ஐந்தாம் தலைமுறை விமானமான ஏஎம்சிஏ பெறப்படும் என விமானப்படை கூறியுள்ளது.