
அடுத்த நான்கு அல்லது ஐந்து ஆண்டுகளில் இந்தியா சொந்தமாக ஹைப்பர்சோனிக் ஏவுகணை கொண்டிருக்கும் என DRDO தலைவர் சதிஷ் ரெட்டி கூறியுள்ளார்.
ஹைப்பர் சோனிக் ஏவுகணை அமைப்பை முழுவதுமாக மேம்படுத்த நான்மு முதல் ஐந்து ஆண்டுகள் ஆகும் என அவர் கூறியுள்ளார்.
கடந்த செப்டம்பர் 7 அன்று இந்தியா Hypersonic Technology Demonstrator Vehicle-ஐ வெற்றிகரமாக சோதனை செய்தது.இந்த சோதனையில் இந்த வாகனம் மாக் 6 அளவு வேகத்தை அடைந்தது.
இதற்காக டிஆர்டிஓ சொந்தமாகவே ஸ்க்ராம்ஜெட் புரோபல்சனை மேம்படுத்தியுள்ளது.இது ராம்ஜெட் என்ஜின்களை விட அதிக திறன் கொண்டது.
எதிரிகளால் நிலைநிறுத்தப்பட்டுள்ள வான் பாதுகாப்பு ஏவுகணைகளால் கூட இந்த ஹைப்பர்சோனிக் ஏவுகணைகளை தடுப்பது கடினம்.